சமஸ்டி கொள்கையினை தமிழரசுக் கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை- கைவிடமாட்டோம் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்

தமிழரசுக்கட்சியென்பது அடக்குமுறையுடன் கூடிய கட்சியல்ல, ஜனநாயக ரீதியான பண்புமிக்க கட்சி, இந்த கட்சியில் எந்த காலகட்டத்திலும் தந்தை செல்வாவினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கை ரீதியான கட்சியாகவே அது காணப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவரான தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தனிமனித சிந்தனை, தற்போக்குவாத சிந்தனை என்பதைவிட தமிழ் மக்களுக்கான அபிலாசைகளைக் கொண்ட பொதுச் சிந்தனையே தந்தை செல்வாவின் சிந்தனையோடு கொள்கையோடு இணைந்து செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

இல்லையென்றால் சில விடயங்களில் நாங்கள் மீண்டும் மீண்டும் பின்நோக்கி செல்லக்கூடிய வாய்ப்பிருக்கின்றது. தமிழரசுக்கட்சியென்பது அடக்குமுறையுடன் கூடிய கட்சியல்ல.

ஜனநாயக ரீதியான பண்புமிக்க கட்சி. இந்த கட்சியில் எந்த காலகட்டத்திலும் தந்தை செல்வாவினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கைரீதியான கட்சியாகவே அது காணப்பட்டது.

சமஸ்டி கொள்கையினை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை, கைவிடமாட்டோம். தந்தை செல்வாவின் கொள்கையின் பாதையிலேயே நாங்கள் பயணம் செய்ய வேண்டும். எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இதுவே அடிப்படை கருத்தியலாக காணப்படவேண்டும்.

அதனை தனிப்பட்ட முறையில் யாரும் எவரும் கைவிடமுடியாது, அது எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லவும் முடியாது. இன்று பேரினவாத சக்திகள் ஒற்றையாட்சி சிந்தனையுடனேயே இருக்கின்றனர். அதேபோன்று அதிதீவிரமாக தமிழர் சார்பில் சிந்திக்கின்றர்வர்கள் தனிநாட்டு கோரிக்கையில் இருந்தார்கள்.

இந்த இரண்டுக்கும் இடையில் பெறக்கூடிய ஒரேயொரு நடுநிலை தீர்வாக இருப்பது கூட்டாட்சி என்ற முறையாகும். அது தந்தைசெல்வாவினால் வகுக்கப்பட்ட தீர்மானமாகும். அதனால் ஒற்றையாட்சிக்குள் தான் எங்களை கொண்டுசெல்ல முற்படுகின்றார்கள் என்பதற்காக அவர்கள் சொல்லும் விடயங்கள் அனைத்திற்கும் தலையாட்டுவதற்கு எங்களால் முடியாது.

ஒற்றுமையென்பது பேசுவதற்கு நன்றாகயிருக்கும். ஒற்றுமையினைப் பேசிக்கொண்டு உள்ளுக்குள் பகையினை வளர்த்தால் கடைசி வரைக்கும் இந்த ஒற்றுமையென்பது ஏற்பட போவதில்லை. தமிழ் தேசிய கட்சிகள் என்பது உண்மையில் ஒற்றுமைப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

srilankan air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் போலி செயலி: வங்கி கணக்குகள் திருடப்படும் அபாயம்

April 23, 2026

மோசடி கும்பல் வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தொடர்புகொண்டு, உடனடி நிதிச் சலுகைகள் அல்லது நன்மைகள் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி

hig

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் வழக்கில் முதல் முறையாக தமிழில் உத்தரவு

April 23, 2026

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக தமிழில் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது உயர் நீதி​மன்​றத்​தின்

bo

நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

April 23, 2026

கடலில் மீன் பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் தாக்கி, மீன்​பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். நாகை

dailythanthi_2026-04-23_81egsemu_CHENNAI-17

“விசில்” சின்னத்திற்கு வாக்களித்ததைப் படம் பிடித்து ரீல்ஸ்! தவெக நிர்வாகி அதிரடி கைது!

April 23, 2026

திருப்பத்தூர், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகத் தமிழக வெற்றிக்

death

தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

April 23, 2026

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதி, 5ஆம் கட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில், சித்திரை புத்தாண்டுக்கு முந்தைய தினமான

v

விண்வெளியில் அபூர்வ நிகழ்வு: வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை தலைகீழாக மாற்றியது

April 23, 2026

விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை நேரடியான ஆதாரங்கள் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வை வானியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். 41P/Tuttle–Giacobini–Kresák என்று அழைக்கப்படும்

download

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது – இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி

April 23, 2026

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ (Pre-war) காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் பிரிட்டன் இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக்

rat

இரத்னபுரியில் தீ பரவல் ; 90 கடைகள் எரிந்தன!

April 23, 2026

சுமார் 90 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இரத்னபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சந்தை வளாகத்தின் இரண்டாவது

5

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் 30 கோடி ரூபாய் பணம் பூசகரின் வங்கிக் கணக்கில்?

April 23, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த

ne

அபாயகரமான நெகிழி மணிகள் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில்…

April 23, 2026

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி. எலசா III’ (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள்

vikatan_2026-04-23_pjv1ud9i_WhatsApp-Image-2026-04-23-at-9.38.15-AM

தமிழக சட்டசபை தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு! திருப்பூர், நாமக்கல் மாவட்டங்கள் முதலிடம்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதிய

lpl

லங்கா பிறீமியர் லீக் ஜூலையில் ஆரம்பிக்கிறது

April 23, 2026

லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) ஜூலை 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகள்