சட்டரீதியான தடைகள் மற்றும் நிர்வாக தாமதங்கள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கும் செய்யும் நடவடிக்கைகள் இந்த மாதத்தில் தீவிரமடையவுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது
எதிர்வரும் நாட்களில் இந்த வழக்குகளில் கூடிய வேகத்தை பொதுமக்கள் காணமுடியும்.
கைதுகளில் ஈடுபடுவதற்கான சட்டத்தடைகளை நாங்கள் நீக்கியுள்ளோம்.
சில நிர்வாக பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் அவற்றிற்கு விரைவில் தீர்வை காண்போம்,
முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டது முதல் அவருக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபடாமல் அவர் மீதான சர்ச்சைக்குரிய வழக்கு தொடரல் இழுபறிநிலையில் உள்ளது.
ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ம் திகதிக்கு கோட்டை நீதவான் பட்டியலிட்டுள்ளார்,அன்றைய தினம் ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிரான நடவடிக்கை என்னவென்பதை நீதவான் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாமல்ராஜபக்சவிற்கு எயார்பஸ் பணமோசடி குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும்,அதே எயார்பஸ் கொள்வனவு தொடர்பான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் ஒக்டோபர் மூன்று வரை அவர் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விதிவிலக்கான சூழ்நிலைகளை தவிர நீதவான் பிணை வழங்க அனுமதிக்கப்படாத ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பிரிவின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.