கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 15 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அமெரிக்கக் கூட்டாட்சி கடற்போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் லோரா டிபெல்லா (Laura DiBella) தெரிவித்துள்ளார்.

இதற்கான காங்கிரஸ் அனுமதி எதிர்வரும் சில வாரங்களில் கிடைத்தவுடன், இந்த நிதி உதவி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோரா டிபெல்லா தலைமையிலான குழுவினருக்கும் மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலின் போதே இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டாட்சி கடற்போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் ரொபர்ட் ஹார்வி (Robert Harvey) மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் துறைமுக நடவடிக்கைகளின் திறனை அதிகரிப்பதோடு, கப்பல்கள் துறைமுகத்தில் தங்கியிருக்கும் நேரத்தைக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்புத் துறைமுகமானது இலங்கைக்கு மட்டுமன்றி, அமெரிக்காவுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல் போக்குவரத்திற்கும் ஒரு முக்கிய மையமாக விளங்குவதால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகவும் அக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அனுர கருணாதிலக்க, கொழும்புத் துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பது, டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவது மற்றும் எதிர்காலத் துறைமுக வளர்ச்சிப் பணிகளுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும், இலங்கையின் கடல்சார் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக ‘Merchant Shipping Secretariat’ நிறுவனத்தை மிகவும் சக்திவாய்ந்த அதிகாரசபையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் இரண்டாவது மேற்கு முனையத்தை (WCT-2) அபிவிருத்தி செய்வதற்கு அலைத்தடுப்பு அமைப்பை (Breakwater system) விரிவாக்குவது அத்தியாவசியமானது என்பதால், அதற்காக நிதி நிறுவனங்களின் ஆதரவைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கக் கூட்டாட்சி கடற்போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் லோரா டிபெல்லா, செப்டம்பர் 09 முதல் 11 வரை நடைபெறவுள்ள 08 ஆவது கொழும்பு சர்வதேச கடற்போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் மாநாட்டில் (Colombo International Maritime and Logistics Conference) உரையாற்றவுள்ளதுடன், ஆணையாளர் ரொபர்ட் ஹார்வி அதன் கலந்துரையாடல் குழு உறுப்பினராகப் பங்கேற்கவுள்ளார்.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை