கொழும்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரதான நீர்த்தேக்கங்களான கலட்டுவாவ மற்றும் லபுகம ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், கொழும்பின் பல பகுதிகளில் ஏப்ரல் 10-ஆம் திகதி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
2 முதல் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒருமுறை.முக்கிய எச்சரிக்கைகள்:
நீர் இருப்பு: கலட்டுவாவ நீர்த்தேக்கத்திலுள்ள நீர் இன்னும் 22 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. லபுகம நீர்த்தேக்க நீர் இன்னும் 50 நாட்களுக்கு மட்டுமே போதுமானது.பாதிக்கப்படும் இதர பகுதிகள்: ஹன்வெல்ல, மகரகம, கெஸ்பேவ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளிலும் குறைந்த நீர் அழுத்தம் காரணமாக விநியோகக் கட்டுப்பாடுகள் இருக்கும்.கம்பஹா நிலவரம்: களனி ஆற்றின் நீர்மட்டம் போதிய அளவில் இருப்பதால், கம்பஹா மாவட்டத்திற்கான நீர் விநியோகம் தற்போது பாதிக்கப்படாது.