ஐக்கிய அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற குரோஷியாவுடனான சிநேகபூர்வ போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது.
பிரேஸில் சார்பாக டனிலோ, இகொர் தியாகோ, கப்ரியல் மார்டினெல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை லொவ்ரோ மஜெர் பெற்றிருந்தார்.
இதேவேளை பெல்ஜியம், மெக்ஸிக்கோவுக்கிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில் தம்நாட்டில் நடைபெற்ற ஜப்பானுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
இது தவிர தம்நாட்டில் நடைபெற்ற எகிப்துடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் சமப்படுத்தியிருந்தது.