சென்னை:
“குதிரை பேரம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது; கூவத்தூரில் குதிரை பேரம் நடத்தியவர்களுக்குத்தான் அதைப்பற்றித் தெரியும்” என்று அதிமுக எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ள இசக்கி சுப்பையா எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அசுர வேக பதிலடி கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, இன்று காலை சபாநாயகரை நேரில் சந்தித்துத் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) மாஸாக இணைந்தார். அவருடன் தேமுதிக-விலிருந்து அண்மையில் விலகிய நடிகர் மீசை ராஜேந்திரன், அதிமுக தலைமைப் பேச்சாளர் சசிரேகா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் ஐக்கியமாகினர்.
தவெக-வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இசக்கி சுப்பையா பேசியதாவது:
“நான் நன்றியோடு வணங்கும் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் நலன் கருதி மட்டுமே இந்தத் தார்மீக முடிவை எடுத்துத் தவெக-வில் இணைந்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னால் இயன்றதைச் செய்தேனே தவிர, எதிர்க்கட்சியாக இருந்ததால் வேறு எந்தப் பாரிய நலத்திட்டத்தையும் தொகுதிக்குக் கொண்டு வர முடியவில்லை. முன்னாள் முதலமைச்சரிடம் 10 முக்கியக் கோரிக்கைகளைக் கொடுத்தேன், ஆனால் அவர் ஒன்றைக்கூடச் செய்யவில்லை. ஒரு மாநிலத்தில் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்தால் மட்டும்தான் மக்களுக்கு முழுமையாக நல்லது செய்ய முடியும். அதனால்தான் தவெக-வில் சேர்ந்தேன்.
பொறுப்பேற்ற வெறும் 15 நாட்களிலேயே மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் அசுர வேக செயல்பாடுகள் எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தேர்தலில் மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் இந்த 15 நாட்களிலேயே தவெக அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. என் மீது யாரும் எவ்விதக் குற்றச்சாட்டையும் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே உடனடியாக விலகத் தயார். குதிரை பேரம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அது ஏற்கனவே கூவத்தூரில் குதிரை பேரம் நடத்தியவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். நான் கூவத்தூருக்குச் செல்லவில்லை, அதனால் அங்கு என்ன நடந்தது என்பதும் எனக்குத் தெரியாது.
எனக்கு வாக்களித்த மக்கள், இசக்கி சுப்பையா என்ற தனி மனிதனுக்காக வாக்களித்தார்களே தவிர, தவெக வேண்டாம் என வாக்களிக்கவில்லை. நான் தற்போது சேர்ந்துள்ள இடம் மிகவும் சிறப்பானது; இதனால் எனது தொகுதி மக்களுக்கு எல்லா நன்மைகளும் தங்குதடையின்றிக் கிடைக்கும். முன்னதாக, சி.வி.சண்முகம் அலுவலகத்தில் தவெக-விற்கு ஆதரவு கொடுக்கலாமா வேண்டாமா என ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, ‘ஆதரவு கொடுக்க வேண்டும்’ என்று முதன்முதலில் குரல் கொடுத்த ஆள் நான்தான். என்னை அன்பால் மட்டும்தான் தடுக்க முடியும், அதிகாரத்தால் எவராலும் அசைக்க முடியாது” என்று மிக ஆக்ரோஷமாகப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் மீசை ராஜேந்திரன், “கேப்டன் விஜயகாந்துடன் 32 வருடங்கள் பயணித்தேன். செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் கேப்டனுடன் பயணித்துவிட்டு, இப்போது செந்தூரப்பாண்டியின் தம்பியான முதலமைச்சர் விஜய் அவர்களுடன் பயணிக்க வந்துள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இசக்கி சுப்பையாவின் இந்த அதிரடிப் பேட்டி கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#IsakkiSubbaiahInterview #NoToHorseTrading #AiadmkCrisis #BreakingNews #May26 #ThalapathyVijay #TVK_Government #NewGovernmentTN #AmbasamudramMLA #KoovathurPolitics #EdappadiPalaniswami #EnAnand #MeesaiRajendran #SpeakerDecision #ByElectionTN #SouthTN_Politics #SecretariatUpdates #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_ #TN_Politics2026