சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பதிலுரையில் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார். இதற்குப் பதிலடியாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனது பதிலுரையை ஒரு ‘ஸ்கிரிப்ட்’ செய்யப்பட்ட அவதூறாக மாற்றியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவையின் நேரலை கேமராவைச் சினிமா கேமராவாக நினைத்துக்கொண்டு அவர் பேசியது, அவையின் மாண்புக்கு விடுக்கப்பட்ட சவால் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்வெட்டு, விவசாயிகளின் சிக்கல்கள், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு போன்ற முக்கியமான மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அவர் முன்வைத்துள்ளதாகவும் உதயநிதி சாடியுள்ளார். விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் என்று முதலமைச்சர் கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். குறிப்பாக, ‘குட்டிக்கதை சொல்கிறேன்’ என்று முதலமைச்சர் பேசியது, சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதாக அவர் விமர்சித்தார். தான் இன்னும் நடிகர் விஜய் என்ற இமேஜிலேயே இருப்பதாகக் குறிப்பிட்ட உதயநிதி, இனியாவது முதலமைச்சர் விஜய்யாக அவர் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்களிடையே கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
#UdhayanidhiStalin #CMVijay #DMK #TVK #Vijay #ThalapathyVijay #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #VijaySpeech #TamilNaduPolitics #PoliticalCriticism #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #OppositionWalkout #PoliticalAnalysis #PublicRepresentation #AdministrativeResponse #Vijayism #Justice