கிராமப்புற ஒன்டாரியோ நகராட்சி சங்க (Rural Ontario Municipal Association) மாநாட்டில், கிராமப்புற ஒன்டாரியோவில் வேலைவாய்ப்புகளையும் சமூகங்களையும் பாதுகாப்பதற்கான எங்கள் அரசின் திட்டம் குறித்து நான் உரையாற்றினேன் என ஒன்ராறியோவின் பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) பதிவிட்டுள்ளார்.
கிராமப்புற ஒன்டாரியோ நகராட்சி எங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தின் முக்கிய இயக்க சக்தியாகும். அங்கு உள்ள சமூகங்களுக்கு தேவையான சேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் ஆதரவுகளை வழங்க நாம் முதலீடு செய்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.