சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பசுமைப் போர்வையையும் மேம்படுத்தும் நோக்குடன், வலி வடக்கு பிரதேச சபை மற்றும் விதைப்பனைத்தும் விருட்சமே அமைப்பு இணைந்து முன்னெடுத்த மர நடுகை செயற்றிட்டம் நேற்று (08) மாலை காங்கேசன்துறை கடற்கரைப் பகுதி மற்றும் சிறுவர் பூங்காப் பகுதி ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், விதையனைத்தும் விருட்சமே” அமைப்பின் உறுப்பினர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.