மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: இருவரை தேடும் பொலிஸார்!

பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில், காரில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஆண் ஒருவரையும் இரு பெண்களையும் நோக்கி டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தக் குற்றம் தொடர்பில் பத்தேகம காவல்துறையினரும் எல்பிட்டிய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த​ நிலையில், இக்கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடைய மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தற்போது அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதால், அவர்களைக் கைது செய்ய முடியாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாக 50 வயதான லத்து கோலித யசரத்ன டி சொய்ஸா மற்றும் 35 வயதான வதுதுர புத்தி மதுஷங்க குணசிரி ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், பத்தேகம காவல்துறை பொறுப்பதிகாரியின் 071-8591480 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது பத்தேகம காவல்துறை நிலையத்தின் 091-2292222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ உடனடியாகத் தெரிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

8

“காவிரியின் குறுக்கே அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது மோசடி!” – வைகோ!

November 9, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது அப்பட்டமான மோசடி

7

“தவெக ஆட்சி துன்பம் மிகுந்த ஆட்சி!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

November 9, 2026

திருப்பூர்: தவெக ஆட்சியில் ஊழல், போதைப்பொருள் விற்பனை மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, தவெக ஆட்சி துன்பம் மிகுந்த

6

“மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை!” – அன்புமணி ராமதாஸ்!

November 9, 2026

சென்னை: மேகதாது அணை கட்டக் கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆணித்தரமாகத்

5

“ஒரு மனித உயிருக்கு ரூ. 40 லட்சம்தான் மதிப்பா?” – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

November 9, 2026

சென்னை: கொலைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் எனத்

4

“சென்னைக்கு 1,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்!” – முதல்வர் விஜய் உத்தரவு!

November 9, 2026

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர்

3

“தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் விமான பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!” – பல மடங்கு கட்டணம் உயர்வு!

November 9, 2026

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பி வரும் நிலையில், உள்நாட்டு விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால்

2

“மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்!” – கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

November 9, 2026

கோயம்புத்தூர்: மேகதாது அணை விவகாரத்தில் உண்மை நிலையை முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சித்

1

“சாதாரண மனிதர்களும் மனசாட்சி உள்ளவர்களும் அரசியலில் பயணிக்க முடியாது!” – துரை வைகோ வேதனை!

November 9, 2026

தூத்துக்குடி: சாதாரண மனிதர்களும் மனசாட்சி உள்ளவர்களும் அரசியலில் பயணிக்க முடியாது என்றும், அரசியல்வாதிகளின் டிஎன்ஏ தனி என்றும் மதிமுக முதன்மைச்

(Zak Miller)

நலமடைந்து வருகிறார் பிரித்தானிய குத்துச்சண்டை வீரர்

November 9, 2026

பிரித்தானிய குத்துச்சண்டை வீரரான சாக் மில்லர் (Zak Miller), தனது போட்டியின் போது தலையில் ஏற்பட்ட பயங்கரமான காயம் காரணமாக

he

இரு நாட்களில் 14 சம்பவங்களில் 16 பேர் பலியானதாக தரவு!

November 9, 2026

கடந்த இரண்டு நாள்களுக்குள் இலங்கையில் பதிவான பாரிய விபத்துகள் மற்றும் அனர்த்தங்களால், ஒரு கோடீஸ்வர வர்த்தகர் மற்றும் விசேட வைத்தியர்

path

மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: இருவரை தேடும் பொலிஸார்!

November 9, 2026

பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக பொலிஸார்

deng

107,829 டெங்கு நோயாளர்கள் பதிவு: கம்பஹாவில் அதிகம்!

November 9, 2026

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை 107,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமான