காங்கேசன்துறையில் இருந்து 890 கிலோமீற்றர் தொலைவில் அர்னாப் புயல்!

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய “அர்னாப்” (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து ‘மிகத் தீவிர புயலாக’ மாற்றமடைந்துள்ளது.

இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் இந்த தீவிர புயலானது மையக்கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இன்று பி.ப. 05.30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதுடன், அதன்பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையினூடாக இந்தியக் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொகுதியின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லை என்றபோதிலும், இத்தொகுதியை நோக்கி ஈர்க்கப்படும் காற்றுப் ஓட்டம் நாட்டின் ஊடாகக் காணப்படுவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் நிலைமை இன்றைய தினமும் மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வட, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

IMG_0816

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

October 27, 2026

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு

IMG_0815

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் தளம்பல் நிலை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

October 27, 2026

வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

IMG_0814

இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

October 27, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,295 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

8

“பழக்க தோஷத்தில் ஆவின் பொருள்களை பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

October 27, 2026

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்புப் பலகாரங்களின் விலையைத் தமிழக வெற்றிக் கழக அரசு

7

“8 பேர் அமைச்சர் ஆகிவிட்டதால் மட்டும் அனைத்தும் ஒரே நாளில் மாறிவிடாது” – அமைச்சர் வன்னி அரசு!

October 27, 2026

கோயம்புத்தூர்: சாதிய வன்கொடுமையால் கோவையில் சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவர் அகிலனின் இல்லத்திற்குச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

6

“முதல்வர் ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது!” – நிர்மல்குமார் பேட்டி!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக

5

“அன்பில் மகேஷ் கைது எதிரொலி; இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்..!” – தவெக பதிவு!

October 27, 2026

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து, இனி வரும் காலம் திமுகவிற்குத் திக் திக் நிமிடங்கள் என்று

4

“திமுக தீய சக்தி என்றால் தவெக கொடிய தீய சக்தி!” – சீமான் கடும் விமர்சனம்!

October 27, 2026

சிவகங்கை: திமுக தீய சக்தி என்றால், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கொடிய தீய சக்தி என்று நாம்

3

“வெளியில் குற்றவாளிகள்… கைதிகளும் தப்பியோட்டம்” – மு.க.ஸ்டாலின் சாடல்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டச் சிறையில் இருந்து பதினேழு கைதிகள் ஒட்டுமொத்தமாகத் தப்பிச் சென்ற மாபெரும் அதிர்ச்சிச் சம்பவத்திற்குத் திராவிட முன்னேற்றக்

2

“அன்பில் மகேஷ் கைது: மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” – சேகர்பாபு!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு முறையான அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் நானூறு கோடி ரூபாய் அளவுக்கு மாபெரும் மோசடி

1

“சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்!” – எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் மேலும்

Toronto-Election-1536x783

டொராண்டோ மாநகராட்சித் தேர்தல் 2026: நகரசபைக்குத் தேர்வானவர்கள் மற்றும் வெளியேறியவர்களின் முழுமையான பட்டியல்

October 27, 2026

திங்கள்கிழமை நடைபெற்ற டொராண்டோ மாநகராட்சித் தேர்தலில் 7 புதிய கவுன்சிலர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய கவுன்சிலர்கள்