காகிதமற்ற சுங்க அறிக்கை ஒக்டோபர் முதல் நடைமுறை

காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள SEMA கட்டிட கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றதுடன், அங்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசு சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்துவது அவசியமானது சுட்டிக்காட்டிய அவர், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுங்க சீராக்கல் செயல்முறையை மிகவும் திறமையானதாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் செய்யப்படும் மாற்றங்களை கணினி அமைப்பினால் கண்டறிய முடியும் என்பதால் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.

வர்த்தக அளவீடுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் காரணமாக எவரது வேலையும் பறிபோகாது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்க சீராக்கல் முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்பை ஒன்றிணைப்பதன் மூலம் அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியில் (Online) சமர்ப்பிக்க முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

புதிய நடைமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமானது என்றும், அந்த ஒத்துழைப்பு கிடைத்தால் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் அதை வெற்றிகரமாகத் தொடங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது