தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாக் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளதாவது
இரசாயனக்கலப்பு கண்டறியப்பட்டவுடன் அம்பத்தல மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இரசாயன பொறியியலாளர்கள் களனி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் நீர் தரத்தினை சோதனை செய்தனர்,நீரின் தரம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னர் இன்று காலை மீண்டும் நீர் விநியோகம் ஆரம்பமானது.
கோட்டை நாவல நுகேகொட பத்தரமுல்ல போன்ற பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிப்பது தாமதமாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.