2019ம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு நிரந்தரதீர்பாயத்தின் நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சதிதிட்டம் தீட்டியமை,தாக்குதல்களுக்கு உதவிபுரிந்தமை,ஆயுதங்கள் வெடிமருந்துகளை சேகரித்தமை உட்பட23,270 குற்றச்சாட்டுகளை பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் பிரதான பிரதிவாதிகளில் ஒருவரான நௌபர் மௌலவி உட்பட பல பிரதிவாதிகள் இந்த தாக்குதல்களை மேற்கொண்ட குழுவினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு நிரந்தர தீர்ப்பாயத்தின் மூவர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
(ரி)