“கல்வியே சமூக மாற்றத்திற்கான சிறந்த சாதனம்” என்ற எண்ணக்கருவுக்கு அமைய, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இலவச கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கஹவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பரீட்சையை எதிர்கொள்வதற்கான நேர்மறையான மனப்பான்மையும், அரச ஆசிரியர் நியமனம் பெறுவதற்கான உத்வேகத்தையும் அதிகரிப்பது காலத்தின் தேவையாக கருதப்படுகின்றது. இதனை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு SLTS 3 I பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர்கள், நுண்ணறிவு மற்றும் அனுபவமிக்க வளவாளர் சியாத், இப்பிரதேச அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் 170ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கருத்தரங்கு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய இரத்தினபுரி பிரபல தொழிலதிபர் திரு. ராஜ்குமார் [Rajkumar Gems], Power People Lanka Foundation, IQ Centre, வளவாளர் சியாத், மற்றும் கஹவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலய பாடசாலை சமூகத்திற்கும் ஏற்பாட்டாளர்கள் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.