பீல் பிராந்திய காவல்துறையின் வெறுப்புக் குற்றப்பிரிவு விசாரணையாளர்கள் கனடா பிராம்ப்டனில் சிங்குவாகூசி பூங்காவில் உள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் ஒரு இளம் குற்றவாளியை கைது செய்து குற்றச்சாட்டு வழக்கினைப் பதிவு செய்துள்ளனர்.
2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை அன்று, அந்த நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சிங்குவாகூசி பூங்காவிற்கு சென்றனர். அங்கு சென்றவுடன் சேதப்படுத்தல் நடந்தது உறுதி செய்யப்பட்டதுடன், விசாரணை உடனடியாக வெறுப்பு குற்றப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல் எவரிடமும் இருந்தால், பீல் பிராந்திய காவல்துறையின் வெறுப்பு குற்றப்பிரிவு விசாரணையாளர்களை 905-453-2121 என்ற எண்ணில் (நீட்டிப்பு 6098) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தகவல்களை அநாமதேயமாக வழங்க விரும்புவோர் 1-800-222-TIPS (8477) என்ற எண்ணில் பீல் குற்றத் தகவல் மையத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.