செந்தில் குமரன் நிவாரண நிதியம் கனடாவில் நடத்திய எம்.ஜி.ஆர் 109 – நிதி திரட்டும் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டிய ஒன்றுகூடல் நேற்று 10 மணிக்கு கென்னடி கென்வென்ஷன் மத்திய மண்டபத்தில் நடைபெற்றது.
‘எம்.ஜி.ஆர் 109’ நிகழ்வில் சுமார் 236,573.96 கனேடிய டொலர் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் திரட்டப்பட்ட நிதியின் ஊடாக இலங்கையில் இதய நோய் தொடர்பான சத்திர சிகிச்சைகளுக்கு உதவிகள் தேவைகளையுடைய மக்களுக்கு செந்தில்குமரன் பெருமளவிலான ஆதரவினை வழங்கிவருகின்றார். அத்துடன் சில வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை சரிவர பராமரிப்பதற்குத் தேவையான கட்டுமான வசதிகளையும் அமைத்துக் கொடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமன்றி இலங்கையில் உதவிகளை பெறும் மக்கள் தொடர்பான விடயங்களை காணொளிகள் வாயிலாக நிதிஉதவிகளை வழங்கியோருக்கு செந்தில்குமரன் பகிர்ந்துகொண்டுமிருக்கின்றார்.
இன்றைய தினம் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கான ஒன்றுகூடலில் செந்தில்குமரன் தனது ஏற்புரையில் எனது தாயார் சிறுவயதில் தானம் கொடுக்கும்போதும் எனது கையால் கொடுக்கவேண்டும் என பழக்கியவர் அதனைதான் நான் இப்போது ஆலயங்களில் செய்துகொண்டிருக்கின்றேன்.
அது முக்கியமான ஒரு விடயம் பிள்ளைகளை சின்னவயதிலேயே கொடுக்கப்பழக்குவது என்பது விசேடமான விடயம்.பிள்ளைகள் சமூக பொறுப்புள்ளவர்களாக வளருவார்கள்.
அதேநேரம்இது நான் இல்லை நீங்கள் தான் நீங்கள் இல்லை என்றால் இவ்வளவும்நடந்திருக்காது.
எவ்வளவுதான் நான் இதனை தனியாளாக செய்தாலும் நிதி உதவி வழங்குவது நீங்கள் தான்.
இதிலிருந்து ஒரு சதமும் தொடகூடாது என்றுதான் நான் தீர்மானித்து செயற்படுகின்றோம்.
எங்களுடைய செயற்பாடுகள் நிதி தொடர்பான விபரங்களை நான் தொடர்ச்சியாக எனது முகநூல் மூலம் பகிர்ந்து வருகின்றேன்.
பகிர்ந்துகொள்ளாத விடயங்கள் பல உள்ளன இதற்கு நேரமில்லை தான் காரணம் நான் எனது வர்த்தக முயற்சிகளையும் கவனித்துக்கொள்ளவேண்டும் இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் மருத்துவர்களிடமிருந்து தகவல்கள் வரும் .இதன் காரணமாக முழு விபரங்களையும் உங்களுடன் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியாது.
மோகனுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் அவர் தான் என்னுடன் தோளோடு தோள் நின்று செயற்படுகின்றார். பல சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் மருத்துவர் காந்திஜி ருசாந்தா அந்த குழுவினரே ஒரு சதமும் வாங்காமல் பணியாற்றுகின்றார்கள்.
ஏன் இருதய சத்திரகிசிச்சை
தாயகத்தில் பலர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்படுகின்றனர் அதில் சிறுநீரகம் ஈரல் இருதய பாதிப்பு போன்ற நோய்களுக்கு உடனடியான தீர்வு இல்லை.
நோய்தீவிரமாகின்ற நேரங்களில் நான் இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு அவர்களை கொழும்பிற்கு அனுப்புமாறும் அதற்கான ஏற்பாடுகளை நான் பார்த்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவிப்பேன்.
எல்லாரும் இருதய சத்திரசிகிச்சை செய்ய தயாராக உள்ளனர் ஆனால் 5400 பேர் யாழ்ப்பாண மருத்துவமனையில் பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொருத்தரும் மரணத்தின் விளம்பில் நின்றுகொண்டிருக்கின்றார்கள் எத்தனையோ பேர்.
அதில் இளம் நோயாளிகளை இனம் கண்டு அவர்களை கொழும்பிற்கு கொண்டுவந்து சத்திரசிகிச்சையை செய்வதைதான் நாங்கள் லங்கா மருத்துவமனையின் துணையுடன் செய்து வருகின்றோம்.
லங்கா மருத்துவமனைக்கு நாங்கள் இந்த நேரத்தில் நன்றி சொல்லவேண்டும் மற்றவர்களுக்கு 25 இலட்சம் என்றால் எங்களுக்கு செலவு 22 இலட்சம்தான் முடிகின்றது.
அதனைவிட மருத்துவர்கள் குழு ஒரு ஐந்துஇலட்சத்தினை தாங்களே பொறுப்பேற்கின்றார்கள். ஆகவே 17 அல்லது 18 இலட்சத்தில் தான் சத்திரசிகிச்சை நடக்கின்றது.
சிறுவர்களுக்கான சத்திரசிகிச்சையை காஞ்சன சிங்கப்புலி என்ற சிங்கள மருத்துவர் செய்கின்றார்.அது வேறு ஒரு குழுவினர் அவர்கள் சிறுவர்கள் நோய் தொடர்பானவர்கள் அவர்களிடம் கட்டணங்களை குறைக்குமாறு கேட்க முடியாது நான் முதலில் அவ்வாறு கேட்கலாமோ என யோசித்தேன் ஒரு விடயத்தை தெரிவிக்கவேண்டும் வைத்தியர் காஞ்சன சிங்கப்புலி ஒரு நாளைக்கு ஆகக்குறைந்தது இரண்டு சத்திரசிகிச்சை செய்வதை நான் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் பார்த்தேன்.அரசமருத்துவமனை தான் முழு நேரமாக பணியாற்றுகின்றார் காலை முதல் மாலை வரை சத்திரசிகிச்சை செய்துவிட்டுதான் பணியை முடிக்கின்றனர்.
ஆகவே வார இறுதியில் கிடைக்கின்ற நேரத்தில்தான் இதனை செய்கின்றார்கள்இ ஆகவே நாங்கள் அவர்களிடம் கட்டணத்தை குறைத்துதருமாறு கேட்ககூடாது என நான்விட்டுவிட்டேன்.செய்து தந்தாலே அது எங்களுக்கு பெரிய விடயம்.
அவருடைய நேரத்திற்காக பலர் காத்திருக்கின்றனர் ஆனால் அவர் எங்களுக்காக நேரம் ஒதுக்கி செயற்படுகின்றார் என செந்தில்குமாரன் மேலும் தெரிவித்திருக்கின்றார்.