இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உணர்வை நனவாக்க இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தம் தேவை

இலங்கைத் தமிழர்களின் சம உரிமை மற்றும் கூடுதல் அரசியல் அதிகார அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், 1987-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் ஆரம்பக் கட்டத்தில் கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய, இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டை இலங்கைத் தமிழ் கட்சிகள் கோரியுள்ளன. இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19, 2026) சந்தித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் தலைவர்கள் அடங்கிய குழுவினர் […]
மிசிசாகா வாகன விபத்தில் பாதசாரி பலி: தப்பியோடிய வாகன ஓட்டுநர் கைது

மிசிசாகாவில் கடந்த வாரம் பாதசாரி ஒருவர் மீது வாகனம் மோதி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவத்தில், ஒருவரைக் கைது செய்துள்ளதாக பீல் காவல்துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 அன்று அதிகாலை 3:45 மணியளவில், டெர்ரி சாலை (Derry Road) மற்றும் ஹுரோன்டாரியோ வீதி (Hurontario Street) சந்திப்புப் பகுதியில் பாதசாரி ஒருவர் வாகனத்தால் மோதப்பட்டதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பின்வரும் தகவல்கள் தெரியவந்துள்ளன: டெர்ரி சாலையில் மேற்கு நோக்கிச் சென்ற ஒரு கரும் நிற […]
ஒட்டாவா ஆற்றில் பாரிய வெள்ளப்பெருக்கு: கியூபெக்கில் அவசரகால நிலை பிரகடனம்!

கனடாவின் ஒட்டாவா ஆற்றில் (Ottawa River) நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து வருவதால், எதிர்வரும் நாட்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கியூபெக் மாகாணத்தின் போர்ட்-குலோஞ்ச் (Fort-Coulonge) பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நீர்மட்டம் உயர்வு: பெய்து வரும் மழை மற்றும் வடக்குப் பகுதியில் உருகும் பனி காரணமாக ஒட்டாவா-கட்டினோ (Ottawa-Gatineau) பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது செவ்வாய் அல்லது புதன்கிழமை அளவில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசரகால நிலை: […]
வண்ணார்பண்ணை காணி மோசடி: ஒரு வருடத்தின் பின் சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் சுமார் 160 பரப்பு காணியை மோசடியான முறையில் போலி உறுதி மூலம் அபகரித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஒரு வருடத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு காணியை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக பொலிஸாருக்குப் புகார் கிடைத்திருந்தது. இந்த மோசடிக்கு உதவியதாகக் கருதப்படும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கடந்த ஒரு வருடமாகத் தேடி வந்தனர். திங்கட்கிழமை குறித்த நபர் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் […]
ஈரானின் உயர் தலைவர் அலி காமெனியின் உடல் ஏழு வாரங்கள் கடந்தும் இன்னமும் நல்லடக்கம் செய்யப்படவில்லை?

அமெரிக்க – இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி காமெனி உயிரிழந்து ஏழு வாரங்கள் கடந்தும் இன்னும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது ஈரானின் மத, கலாசார, அரசியல் மரபுகளுக்கு மாறான ஒரு செயல் என சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. 86 வயதான அலி காமெனியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை ஈரான் அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் உயர் […]
கோக்கரெல்ல பகுதியில் பெண்ணைத் தாக்கிய ஒன்பது பேர் கைது
கோக்கரெல்ல (Gokarella) பகுதியில் பெண்ணொருவர் வீதியில் வைத்துத் தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி மெடலந்த (Medalanda) பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஒரு குழுவினர் பகிரங்க வீதியில் வைத்து அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது குறித்த காணொளி வெளியானதை அடுத்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். தாக்குதலின் பின் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர்கள், கோக்கரெல்ல பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை […]
கனடாவில் செந்தில்குமாரனின் நிவாரண நிறுவனத்தின் ‘எம்.ஜி.ஆர் 109’ நிகழ்வு வெற்றிக் கொண்டாட்டம்!

செந்தில் குமரன் நிவாரண நிதியம் கனடாவில் நடத்திய எம்.ஜி.ஆர் 109 – நிதி திரட்டும் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டிய ஒன்றுகூடல் நேற்று 10 மணிக்கு கென்னடி கென்வென்ஷன் மத்திய மண்டபத்தில் நடைபெற்றது. ‘எம்.ஜி.ஆர் 109’ நிகழ்வில் சுமார் 236,573.96 கனேடிய டொலர் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் திரட்டப்பட்ட நிதியின் ஊடாக இலங்கையில் இதய நோய் தொடர்பான சத்திர சிகிச்சைகளுக்கு உதவிகள் தேவைகளையுடைய மக்களுக்கு செந்தில்குமரன் பெருமளவிலான ஆதரவினை வழங்கிவருகின்றார். அத்துடன் சில வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை சரிவர பராமரிப்பதற்குத் […]
கனடாவின் வருடாந்த பணவீக்கம் 2.4% ஆக உயர்வு

னடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.4% ஆக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் எரிபொருள் விலைகள் உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் விலைகள் 0.9% அதிகரித்துள்ளதாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்திலேயே வருடாந்த பணவீக்க விகிதம் இந்த அளவை எட்டியிருந்தது. அத்துடன், இந்த மாதத்தின் விலை உயர்வு கடந்த 14 மாதங்களில் பதிவான மிக உயர்ந்த மாதாந்த உயர்வு என்று கனடா புள்ளிவிவரத் […]
ட்ரினிடாட் அண்ட் டொபாகோ மயானத்தில் 50 குழந்தைகளின் சடலங்கள் உட்பட 56 சடலங்கள் கண்டுபிடிப்பு!

ட்ரினிடாட் அண்ட் டொபாகோவில் உள்ள ஒரு மயானத்தில் குறைந்தது 50 பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள் உட்பட 56 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் போர்ட் ஒஃப் ஸ்பெயின் (Port of Spain) தலைநகரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள குமுடோ என்ற நகரில் உள்ள மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த சடலங்கள் மயானத்தில் போடப்பட்டமையானது, உரிமை கோரப்படாத உடல்களை “சட்டவிரோதமான முறையில் அப்புறப்படுத்திய” ஒரு செயலாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் […]
ஜப்பானில் முதல் சுனாமி அலை கரையை அடைந்தது

ஜப்பானில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, முதல் சுனாமி அலை நாட்டின் கடற்கரையை எட்டியுள்ளது என ஜப்பான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அந்த முதல் அலை சுமார் 40 செ.மீ. உயரம் கொண்டதாக பதிவாகியுள்ளதாகவும், அது பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில், கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அடுத்தடுத்த அலைகள் அதிக உயரத்துடன் இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் […]