உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்தார் இந்திய துணை ஜனாதிபதி

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்த இந்திய துணை ஜனாதிபதி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து, அவர் டெல்லியில் இருந்து நேற்று (19) நாட்டிற்கு வருகை தந்திருந்தார். இதன்போது அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்நாட்டு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் தாயகம் செல்கின்றனர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (20) மாலை விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்திய – இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு மொத்தம் 360 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 339 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ் […]
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கணக்காளராக ரதீஸ் கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் கணக்காளராக வல்லவராஜன் ரதீஸ் இன்றைய தினம் (20.04.2026) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமையேற்பதற்கு முன்னராக சம்பிரதாயபூர்வமாக கணக்காளர் வரவேற்க்கப்பட்டார் என்பதுடன், அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் […]
புத்தாண்டு சுற்றிவளைப்பு; 1200 பேருக்கு வழக்கு

புத்தாண்டுப் பருவகாலத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 21,796 நிறுவனங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதில் 2,300 பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பங்கெடுத்துள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார். இந்தச் சோதனைகளின் போது 2,114 உணவு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகாரிகளால் 4,308 உணவுப் பொருட்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அவற்றில் மனித நுகர்வுக்கு பொருத்தமல்லாத […]
நிலக்கரி இறக்குமதி; 1989-ஆம் ஆண்டிலிருந்து விசாரணையை ஆரம்பியுங்கள் – நாமல் ராஜபக்ச
நிலக்கரி இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணை ஆணைக்குழுவின் வரம்பைக் கேள்விக்குட்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ச, விசாரணைகள் 2009-ஆம் ஆண்டிற்குப் பதிலாக 1989-ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராஜபக்ச, அந்த காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், 1989 முதல் நடந்த அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். “அக்காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், 1989 முதல் அவர்கள் விசாரணை நடத்துவது சிறப்பாக இருக்கும்,” […]
எரிசக்தி நெருக்கடி குறித்த கட்டுரைக்காக பத்திரிகையாளர் சுலோசனாவிடம் சிஐடி விசாரணை

இலங்கையின் எரிசக்தி நெருக்கடி குறித்த தனது கட்டுரை ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்தமைக்காக, பத்திரிகையாளர் சுலோசனா ரமையா மோகன் குறித்து ‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்திடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தகவல் கோரியுள்ள நடவடிக்கையை சுதந்திர ஊடக இயக்கம் (FMM) கண்டித்துள்ளது. ‘சிலோன் டுடே’ (Ceylon Today) பத்திரிகையின் பிரதி ஆசிரியரான ரமையா மோகனுக்கு ‘X’ தளம் விடுத்துள்ள அறிவிப்பில், “மின்சக்தி அமைச்சின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் கால அவகாசம் கோருகிறது” என்ற தலைப்பில் அவர் பகிர்ந்த […]
நாளை தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்றதும் அமலுக்கு வரும் விதிமுறைகள்

தமிழகத்தில் நாளை (ஏப்.21) மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிவடைந்த உடன், அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கடைசி நேர சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஏப்.21 மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிவடைந்த உடன், அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள் […]
“ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து சட்ட நகலை கொளுத்தியது தேசத் துரோகம்” – அன்புமணி

“ஸ்டாலின் கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சட்ட நகலை தீயிட்டு கொளுத்தினார். கருப்புச் சட்டை போட்டு கொளுத்தினால் அது எவ்வளவு பெரிய தேசத் துரோக செயல், வேறு யாராவதாக இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார்கள்,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அன்புமணி பேசியதாவது: இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல், பாட்டாளிகளுக்கு […]
அமெரிக்காவுக்கு கியூப ஜனாதிபதி எச்சரிக்கை

கியூபா ஒரு அமைதியான நாடு, ஆனால் அமெரிக்கா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி மிகுயெல் டயஸ்-கானெல் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த பெப்ரவரி மாதம் கியூபா மீது எண்ணெய் தடையை விதித்தார். அத்துடன் புளோரிடா கடற்கரையிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள இந்த சோசலிச நாட்டின் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல்வேறு மறைமுக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, “ஈரான் மீதான […]
நாவலப்பிட்டியில் நாவல் நகர்

நாவலப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) மதியம் பெய்த கனமழை காரணமாக, நாவலப்பிட்டி நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. நாவலப்பிட்டி பிரதான பேருந்து நிலையத்தில் சுமார் 18 அங்குல உயரத்திற்கு வெள்ள நீர் சூழ்ந்திருந்தது. இதனால் பயணிகள் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பிரதான வீதி: கண்டி – கம்பளை வீதியிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். நகரின் வடிகால்கள் முறையாக […]