‘கனடா உதயன்’ பத்திரிகையின் 20வது சர்வதேச விருது விழா ஜூன் மாதம் 6 ஆம் திகதி (நேற்று) மாலை ஸ்கார்பரோவில் உள்ள The Estate Banquet and Event Centre’ மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கனடா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 6 சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலை, இலக்கியம், தொழில்முனைவு மற்றும் சமூக உறவு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கை அரசியல்வாதியும் சமூக ஆர்வலருமான திரு. மனோ கணேசன் அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.
விருதுடாக்டர் சம்பா சோமஸ்கந்த குருஜிஉதயன் இலக்கிய மற்றும் கலை சிறப்பு விருது – ஒன்டாரியோ, வவுனியூர் இரா உதயனன் உதயன் இலக்கிய மற்றும் கலை சிறப்பு விருது – ஐரோப்பா, திருமதி. செல்வமலர் மதுரநாயகம் உதயன் இலக்கிய மற்றும் கலை சிறப்பு விருது – க்யூபெக், திரு. கணேந்திரன் செல்வராஜா உதயன் வணிக தொழில்முனைவோர் விருது – கனடா, அபிரா ஜெயகுமார்உதயன் யூத் ஐகான் விருது – ஒன்டாரியோ, கனடா வன்னி சங்கம் வி யுனைட்டட் கேயர் பார் கிட்ஸ் – உதயன் தலைமைத்துவ விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில் அனுசரணையாளர்கள் கௌரவிப்பு, நடனம், பாடல் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.