கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Bandaranaike International Airport) துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று அவசரத் தரையிறக்க நடவடிக்கையை (emergency landing procedure) ஆரம்பித்துள்ளது.
விமானம் பறவை மோதலுக்கு (bird strike) உள்ளானதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.