கடன் தரவரிசையை ‘CCC+/C’ ஆக உறுதிப்படுத்தியது S&P Global Ratings!

இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை ‘CCC+/C’ ஆக எஸ்டி அண்ட் பீ குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னோக்கிய 6 முதல் 12 மாத காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி ஒருங்கிணைப்பிற்கும் ஆதரவளிக்கும் நிலைமைகள் தொடர்ந்து நிலவும் என எதிர்பார்ப்பதாக S&P குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், வெளிவாரி தேவை அழுத்தங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் சவாலான நிதியளிப்பு நிலைமைகள் உட்பட குறிப்பிடத்தக்க அபாயங்கள் தொடர்ந்து நிலவுவதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுவது மற்றும் வெளிநாட்டு நாணயமாக மாற்றுவது தொடர்பான அபாய மதிப்பீட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் Transfer and Convertibility Assessment தரவரிசையை ‘CCC+’ இலிருந்து ‘B-‘ ஆக உயர்த்தியுள்ளது.

‘CCC+’ கடன் தரவரிசையானது இலங்கையின் கடன் நிலைமை மேலும் அபாயகரமான மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன், நாட்டின் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் சாதகமான பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என்றும் S&P தெரிவிக்கிறது.

இருப்பினும், இலங்கை அரசாங்கம் அண்மைய காலத்தில் உடனடி நிதி அல்லது கொடுப்பனவு நெருக்கடியைச் சந்திக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் உயர் பொதுக் கடன் சுமை தொடர்ந்து பிரதான சவாலாக இருப்பதுடன், அரசாங்கத்தின் வட்டிப் கொடுப்பனவுகள் அரசாங்க வருவாயில் சுமார் 45 சதவீதத்திற்குச் சமமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமை உள்ளிட்ட வெளிவாரி அழுத்தங்கள் காரணமாக இலங்கையின் வெளிவாரி மற்றும் நிதிச் சமநிலைகளில் தற்காலிக அழுத்தம் ஏற்பட்டதாகவும் S&P சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், உத்தியோகபூர்வ நிதி உதவிகள், தொடர்ச்சியான பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கைக்கு தனது நிதித் தேவைகளை நிர்வகித்துக் கொள்ளவும், நிதி மற்றும் வெளிவாரி நிலைமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என S&P எதிர்பார்க்கிறது.

எனினும், எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட பலவீனமான நிதி அல்லது வெளிவாரி செயற்பாடுகள் அல்லது புதிய நிதி மற்றும் பணப்புழக்க அழுத்தங்கள் ஏற்பட்டால், இலங்கையின் கடன் தரவரிசையைக் குறைக்கக்கூடும் என S&P Global Ratings எச்சரித்துள்ளது.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ