ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் எங்கள் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தோம். அதற்காக, விண்ட்சர் நகரில் அமைந்துள்ள புதிய நெக்ஸ் ஸ்டார் எனர்ஜி (Next Star Energy) பேட்டரி உற்பத்தி ஆலையின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த மிகப்பெரிய புதிய ஆலை முழு திறனில் செயல்படும் போது உயர்ந்த ஊதியம் பெறக் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டந்த நவம்பரில் உற்பத்தி தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு மில்லியன் பேட்டரிகளை ஏற்கனவே தயாரித்துள்ளது.
மேலும், இது ஒன்டாரியோவின் தொடக்கம் முதல் முடிவு வரை உள்ள மாகாண அளவிலான பேட்டரி வழங்கல் சங்கிலியின் முக்கியமான இணைப்பாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் ஒன்டாரியோவில் உள்ள பரந்த அளவிலான முக்கிய கனிம வளங்களை எங்கள் வலுவான உற்பத்தி திறனுடன் இணைத்து, மாகாணம் முழுவதும் நல்ல ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.