புகழ்பெற்ற கனடிய நிறுவனமான Canada Goose ஒன்டாரியோவில் தொடர்ந்து வளர்ந்து, இங்கிருந்தே நல்ல ஊதியமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி என்பதை நேரில் காண நான் சென்றேன் என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Canada Goose போன்ற நிறுவனங்கள் எங்கள் உற்பத்தித் துறையின் வலிமையையும், ஒன்டாரியோ தொழிலாளர்கள் உருவாக்கும் உலகத் தரமான தயாரிப்புகளையும் சந்தைப்படுத்திக் கொண்ருப்பது பெருமைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.