ஒன்டாரியோ அரசு, ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் வகுப்பறை உபகரணங்களை வாங்குவதற்காக நேரடியாக $750 நிதியை வழங்கும் வகுப்பறை பொருட்கள் நிதிதிட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. 2026 மாகாண பட்ஜெட்டின் ஒரு பகுதியாக தொடங்கப்படவுள்ள இந்த புதிய திட்டம், ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் முன்கூட்டியே செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வகுப்பறைக்கு தேவையான பொருட்களை பெற உதவும். இது மாணவர்கள் வெற்றி பெறவும், அவர்களின் முழுத் திறனை அடையவும் மாகாண கல்வி அமைப்பு தொடர்ந்து ஆதரவு வழங்குவதை உறுதி செய்யும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும் ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தெரிவித்திருக்கின்றார்.
எங்கள் மாணவர்கள் பள்ளியில் வெற்றி பெறவும் வளரவும் தேவையான ஆதரவும் உபகரணங்களும் கிடைக்கச் செய்ய, எங்கள் அரசு சாதனை அளவிலான முதலீடுகளை செய்து வருகிறது, “புதிய $750 வகுப்பறை பொருட்கள் நிதிதிட்ட மூலம் மாகாணம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தேவையான வளங்களை நேரடியாக பெற முடியும். அதேசமயம் ஒன்டாரியோவின் கல்வி அமைப்பு மாணவர் வெற்றியை மையமாகக் கொண்டதாக இருப்பதையும் உறுதி செய்கிறது.
2026 செப்டம்பர் மாதம் தொடங்கி, வகுப்பு ஆசிரியர்கள் புதிய மாகாண இணையதளத்தின் மூலம் ஒவ்வொரு கல்வியாண்டிலும் $750 நிதியை பயன்படுத்தி நேரடியாக வகுப்பறை பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
வலுவான மற்றும் பயனுள்ள கல்வி அமைப்பை உருவாக்க எங்கள் அரசு தொடர்ந்து சாதனை அளவிலான முதலீடுகளை செய்து வருகிறது. மாணவர்களின் கற்றலை பாதுகாக்கவும், ஒவ்வொரு மாணவரும் முன்னேற ஆசிரியர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், என்று நிதி அமைச்சர் பீட்டர் பெத்லென்பால்வி (Peter Bethlenfalvy) தெரிவித்தார்.