அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஏவுகணைத் தடுப்புப் பாகங்களின் உற்பத்தித் திறனை விரிவாக்குவதற்காக ‘லொக்ஹீட் மார்ட்டின்’ மற்றும் ‘நோர்த்ரோப் க்ரம்மன்’ ஆகிய முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை அமெரிக்க அரசு வெளியிடவில்லை.
உக்ரைன் மற்றும் ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்க இராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.