விஷால் நடித்த ‘செல்லமே’இ தமன்னா நடித்த ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கியஇ காந்தி கிருஷ்ணா இப்போது இயக்கியுள்ள படம் ‘பிரேக் பாஸ்ட்’. புதுமுகங்கள் ராணவ்இ ரோஸ்லின்இ க்ரித்திக் மோகன்இ அமிதா ரங்கநாதன் மற்றும் அர்ச்சனாஇ சம்பத்ராம்இ ரவிமரியா நடித்துள்ளனர்.
பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் சார்பில் கிரிஜா வரதராஜ் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஏப்.24-ல் வெளியாகும் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.