யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் ஏப்ரல் 17-ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக நிலவி வரும் தையிட்டி விகாரை காணி சர்ச்சை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் எதிர்வரும் 2026 ஏப்ரல் 17-ஆம் திகதி நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் அளவீடு செய்யப்படும்.
காணி அளவீடுகள் நிறைவடைந்ததும், உரிய ஆவணங்களின் அடிப்படையில் காணி உரிமையாளர்கள் யார் என்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படும்.
உரிமையாளர்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர், மிக விரைவான காலப்பகுதிக்குள் அந்தக் காணிகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.