எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகிவிட்டது!

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன.

மக்கள் பன்முக நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்கள் சமூகம் கஷ்டப்பட்டு வாழும் இந்த தருணத்தில் நாட்டில் நடப்பவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அநுர Fail மக்களை தெளிவூட்டும் கருத்தமர்வு தொடரில் நேற்று (23) மாலை பொரல்லை மேகசின் வீதி விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மின் கட்டணத்தை மூன்றில் ஒரு பகுதியாக குறைத்து, 9000 மின் கட்டணத்தை 6000 ஆக 33% ஆல் குறைப்பேன் என கூறியதால் தான் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்றார்.

இப்போது 33% குறைப்பது ஒருபுறமிருக்க மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தற்சமயம் நடந்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எரிபொருட்களைத் தருவதாக கூறிய அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி இப்போது எண்ணெய் மீது வரி மீது வரி சுமத்தி நான்கு வகையான வரிகளை விதித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பொய் கூறி வாக்கு பெற விரும்பாததால் பொய் சொல்லவில்லை என்பதால் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை.

ஆனால் துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எண்ணெய் உட்பட எரிபொருட்களைப் பெற்றுத் தருவதாக பொய்க்கு மேல் பொய் கூறிய தற்போதைய அரசுக்கு மக்கள் வாக்களித்தனர். அவர்களை ஆட்சியில் அமர்த்தினர். தற்சமயம் மக்களே பன்முக நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இப்போதாவது துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எரிபொருட்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய கிழக்கு யுத்தத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், எண்ணெய் விலையை கட்டுப்படுத்த எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும். இறக்குமதி செய்யப்பட்ட எண்ணைய்க்கு ஏன் VAT மற்றும் ஏனைய வரிகளை விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறோம்.

இப்போதாவது தேர்தல் காலத்தில் கூறியதை செயலுருப்படுத்துங்கள். களத்தில் யதார்த்தமாக்க நடவடிக்கை எடுங்கள். எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆறுதலைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

விலை சூத்திரத்தை ஏற்கோம் என்று கூறிய தற்போதைய ஆளும் தரப்பினர் தற்சமயம் அதே விலை சூத்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். உலகில் எண்ணெய் விலை குறைந்தாலும் நமது நாட்டில் எண்ணெய் விலை குறையாது. விலை சூத்திரம் ஊழல் நிறைந்தது என்று கூறிய திசைகாட்டி அரசே இப்போது அந்த விலை சூத்திரத்தின் அடிமையாகி காணப்படுகின்றன.

வரி மற்றும் கமிஷனை நீக்கி சமூக நீதியை நிலை நாட்டுவதாக எதிர்க்கட்சியில் இருந்த சமயம் முழங்கியவர்கள், ஆட்சியைப் பெற்ற பின்னர் அனைத்தையும் மறந்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சார சபையை தனியார்மயமாக்கி நாசமாக்கியுள்ளனர். 23,000 மின்சார சபை ஊழியர்களை வீதியில் இறக்கிவிட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற்று அரசியல் பதவிகளுக்கு வந்த பிற்பாடு இந்த ஊழியர்களை மறந்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமது தேவைக்காகவே இவர்களும் இந்த ஊழியர்களை பயன்படுத்திக் கொண்டனர் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

மக்கள் இப்போதாவது தங்களுக்காக உண்மையாகவே சேவை செய்வது யார் என்ற விடயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றுபவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்தளவு மட்டத்தில் பொய் சொன்ன அரசாங்கமொன்று இலங்கை வரலாற்றிலேயே இதற்கு முன்னர் இருந்ததில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து நுரச்சோலை நிலையத்தை செயலற்றதாக்கி, இந்த ஊழல் நடவடிக்கையை யுத்தத்தை கவசமாக பயன்படுத்தி மூடி மறைக்க முயற்சித்து வருகின்றது.

இந்த தரமற்ற நிலக்கரியால் நுரச்சோலை நிலையத்தின் மின் உற்பத்தி மட்டம் குறைந்துள்ளது. வரலாற்றில் எந்த நாளிலும் நிகழாத வகையில் குறிப்பிட்ட மின் உற்பத்தியை செய்ய இந்த நிலையத்தால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளன என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த போக்கில் தொடர்ந்தால் எதிர்வரும் மாதங்களில் நிலையம் பராமரிப்பு காரணமாக மின் வெட்டுக்கு செல்ல நேரிடும் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

arrest-1

நீதிமன்ற வளாகப் படுகொலை: ஆயுதங்களை வழங்கிய சந்தேகநபர் கம்பஹாவில் கைது

May 14, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார் சமரரத்ன (Ganemulla Sanjeewa) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியதாகக்

hosp

இலங்கை அரச வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைக்காக 10,000 நோயாளிகள் காத்திருப்பு: மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

May 14, 2026

இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் அது தொடர்பான பரிசோதனைகளுக்காக சுமார் 10,000 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில்

rain

இலங்கையில் சீரற்ற காலநிலை: மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை

May 14, 2026

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு

vikatan_2026-05-08_0dw9lsvc_Untitled-8

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை! தவெக-வுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகள் பறிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப்

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)