மதுரை:
முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
போலி வீடியோ சர்ச்சை:
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து எம்ஜிஆர் விஜய்யை வாழ்த்துவது போல தவெகவினர் ஒரு போலி ஏஐ வீடியோவை வெளியிட்டுள்ளனர். எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு? விஜய் எப்போதாவது எம்ஜிஆரை சந்தித்துள்ளாரா? புரட்சித்தலைவரின் கால் தூசிக்குக் கூட யாரும் ஈடாக முடியாது. முதலமைச்சருக்குத் தெரிந்துதான் இந்த வீடியோ வெளியானதா?”
அதிமுகவை அழிக்க முடியாது:
“டிபன் பாக்ஸில் பணம் கொடுத்து தாராபுரம் பார்முலா என ஒன்றை உருவாக்கி குறுக்கு வழியில் வென்றுள்ளனர். அதிமுக சீனியர்களை அதிகாரத்தை வைத்து மிரட்டுகின்றனர். அதிமுகவை அழிக்க நினைத்த திமுகவே தோற்றுவிட்டது, நேற்று முளைத்த காளான் தவெகவால் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. இந்த கீழ்த்தரமான அரசியலை தவெக உடனே நிறுத்த வேண்டும்,” என அவர் எச்சரித்தார்.
#RPUdayakumar #AIADMK #CMVijay #MGR #TVK #AIVideo #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive