சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (எம்.எல்.ஏ.) அரசு சார்பில் புதிய கார் மற்றும் மாதாந்திர பராமரிப்புச் செலவுகளுக்குத் தொகை வழங்கப்படும் என்ற மெகா அறிவிப்பை வெளியிட்டார்.
முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்புகள்:
-
இலவச அரசு வாகனம்: பொருளாதாரப் பின்னணி இன்றி முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.
-
ரூ. 75,000 வாகனப் படி: வழங்கப்படும் வாகனத்தின் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநர் சம்பளத்திற்காக மாதம் தலா ரூ. 75 ஆயிரம் வாகனப் படியாக வழங்கப்படும்.
-
ரூ. 25,000 உதவியாளர் படி: எம்.எல்.ஏ.க்களின் அலுவலகப் பணிகளுக்கு உதவியாளர்களை நியமித்துக் கொள்ள வசதியாக, மாதம் தலா ரூ. 25 ஆயிரம் தனியாக வழங்கப்படும்.
எம்.எல்.ஏ.க்களின் புதிய மாத வருமானம் எவ்வளவு?
தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பள விவரம்:
-
அடிப்படை ஊதியம் – ரூ. 30,000
-
தொகுதிப் படி – ரூ. 25,000
-
வாகனப் படி – ரூ. 25,000
-
மாதாந்திர ஈட்டுப் படி – ரூ. 10,000
-
தொலைபேசிப் படி – ரூ. 7,500
-
தொகுப்புப் படி – ரூ. 5,000
-
அஞ்சல் படி – ரூ. 2,500தற்போதைய மொத்த சம்பளம் = ரூ. 1,05,000.
இது தவிர, சட்டசபைக் கூட்ட நாள்களுக்கான சிறப்புக் படிகள், மருத்துவச் செலவுக்கு ரூ. 5,000 மற்றும் இலவச உணவு, போக்குவரத்து வசதிகளும் உள்ளன. தற்போதைய புதிய அறிவிப்பான ரூ. 1 லட்சத்தையும் சேர்த்தால் எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானம் ரூ. 2.05 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் வாகனப் படி ரூ. 25 ஆயிரம் தொடர்ந்து வழங்கப்படுமா என்பது குறித்து நிதித்துறை விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #TNAssembly #TamilNaduMLASalary #MLACarScheme #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates