ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி?

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனைத் தாக்க முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் வசித்து வருகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வன வள திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோத மணல் அகழ்வு காடழிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இவை அதிகாரிகள் இலட்சம் பெற்றுக்கொண்டு செய்வதாக குற்றம் சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் சட்டவிரோத மணல் மாபியாக்கள் மரக்கடத்தல்காரர்களால் இவ்வாறு மது விருந்துகளும் ஏற்பாடு செய்யப்படுவதாக அறியமுடிகின்றது.

மது விருந்துக்காக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பனிக்கன்குளம் சந்தி பகுதியில் குறித்த இரண்டு வாகனங்களும் சுமார் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இடத்துக்கு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சென்ற போது மதுபோதையில் நின்ற மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஊடகவியலாளருடன் முரண்பட்ட தோடு மாத்திரமின்றி ஊடகவியலாளரை தாக்கவும் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதோடு அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தும் செயற்பாட்டை முன்னெடுத்தது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கும் ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்டது. இதனைவிட வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாங்குளம் பொலிசார் ஊடகவியலாளரை மாங்குளம் பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் மாங்குளம் பொலிஸ் நிலைய பதவி நிலை அதிகாரி ஒருவர் வன வள திணைக்கள அதிகாரிகளிடம் எதுவுமே பேசாது ஊடகவியலாளரை மாத்திரம் அழைத்து கடும் தொனியில் மிரட்டும் வகையில் தேவையில்லாமல் பிரச்சினைகள் போடக்கூடாது ஊடகவியலாளர் என்றால் எதுவும் செய்வீரோ எனவும் தேவையற்ற வார்த்தைப்பிரயோகங்களையும் பயன்படுத்தி அச்சுறுத்தி விட்டு பிரச்சினைகள் போட்டால் உமது ஊடக அடையாள அட்டையையும் இல்லாமல் செய்வேன் என மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கன்றன.

இதனைத் தொடர்ந்து வேறு ஒரு பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டினை பதிவு செய்தார் அவரிடம் மதுபோதையில் அதிகாரிகள் உள்ளனர் அதனை பரிசோதனை செய்யுமாறு கோரிய போதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி மதுபோதையில் நின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது ஊடகவியலாளர் மீது பொலிசார் மிரட்டல் விடுத்தமையானது இவர்கள் அனைவரும் இணைந்தே சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றனர் இதனாலேயே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியதோடு குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மாவட்ட செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ். ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்களிடம் முறைப்பாட்டினை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய