ஈரான் முற்றுகை நடவடிக்கையுடன் தொடர்புடைய அமெரிக்க போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது

அமெரிக்காவின் ‘இன்டிபென்டன்ஸ்’ (Independence-variant) ரகத்தைச் சேர்ந்த கடலோரப் போர் அதிவேகக் கப்பலான ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ (USS Canberra – LCS 30), வெள்ளிக்கிழமை (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (US Central Command) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, ஏப்ரல் 2026 இல், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான கடல்சார் முற்றுகையின் போது, இந்த யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.

யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa), யுஎஸ்எஸ் சார்லஸ்டன் (USS Charleston) மற்றும் யுஎஸ்எஸ் சாண்டா பார்பரா (USS Santa Barbara) ஆகிய கப்பல்களைத் தொடர்ந்து, சமீபத்திய ஆண்டுகளில் கொழும்புக்கு வருகை தந்த நான்காவது அமெரிக்க கடற்படையின் கடலோரப் போர் அதிவேகக் கப்பலாக இந்த யுஎஸ்எஸ் கன்பெராவின் வருகை அமைந்துள்ளது.

இத்தகைய மேம்பட்ட போர்க்கப்பல்களின் தொடர்ச்சியான வருகையானது, ‘இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட கடல்சார் பங்காளிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஈடுபாட்டின் முக்கியமான முக்கியத்துவத்தை’ அடிக்கோடிட்டுக் காட்டுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கமாண்டர் ஜேம்ஸ் மெக்லாலின் (Cmdr. James McLaughlin) தலைமையில் இயங்கும் யுஎஸ்எஸ் கன்பெரா, தனது அடுத்தகட்ட இராணுவப் பணிகளைத் தொடர்வதற்கு முன்னர், எரிபொருள் நிரப்புவதற்கும் விநியோகங்களை மறுசீரமைப்பதற்கும் ஒரு குறுகிய காலத் தளவாட நிறுத்தமாக கொழும்புக்கு வந்துள்ளது.

ஜூலை 2023 இல் கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட யுஎஸ்எஸ் கன்பெரா, அமெரிக்க கடற்படையின் ‘இன்டிபென்டன்ஸ்’ ரக கடலோரப் போர் கப்பற்படையின் ஒரு பகுதியாகும். இது கடற்கரைக்கு அருகாமையிலுள்ள சூழல்களில் அதிவேக மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலானது கடல்சார் பாதுகாப்பு, முன்னிலை இருப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் உட்பட பலதரப்பட்ட இராணுவப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்