ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடம்?

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றார் எனவும் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் எனவும் ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும், அவரது மறைவு குறித்த செய்தி விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் ஈரான் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது மகனான மொஜ்தபா கமேனி சில நாள்களிலேயே உச்ச தலைவராகப் பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.

கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்தார் எனவும் அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருக்கின்றார் என கூறப்பட்டது.

அவரது நிலை பற்றி வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, மொஜ்தபா கமேனியை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அரசுத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் மற்றும் செயல்பாடு தொடர்பாக சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் ஈரானில் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டிருந்தது.

அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனியார் செய்தி நிறுவன நேர்காணலில், ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மேலும் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கமேனி 90 வீதம் செயலிழந்துவிட்டார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மொஜ்தபா கமேனியின் உடல்நிலை பற்றிய ஊகங்கள் தொடர்ந்து பேசப்பட்ட நிலையிலும் ஈரான் அரசு அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தனர். அவருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டதாகவும், நாட்டின் இராணுவச் செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிட்டு வருகின்றார் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.

தற்போது இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கமேனி உடல்நிலை குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஈரான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.