கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக ஆஜர்ப்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபருக்கு உதவினார் மற்றும் மறைமுகமாகத் துணை நின்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றம் பிறப்பித்த அறிவித்தலுக்கு அமைய அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தான் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதவான் பசான் அமரசேன, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் வரும் டிசம்பர் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.