இலங்கையின் மிக உயரமான 6 அடி உயர சிவலிங்கம், இன்று (06) காலை புஸ்ஸல்லாவையில் மிக விமர்சையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்தியாவின் பிள்ளையார்பட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட 16 அடி உயரமான பிரம்மாண்ட பிள்ளையார் சிலையும், அதனுடன் 6 சிவலிங்கங்களும் புஸ்ஸல்லாவை, குபேரப்பட்டி ஸ்ரீ மகா கணபதி கற்பக விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இச்சிலைகள் இலங்கையில் அமையப்பெற்றுள்ள மிக உயரமான சிலைகளாகக் கருதப்படுகின்றன.