இலங்கையின் பெரும்பாகப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புகள்

இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே அவ்வழுத்தங்களைக் குறைப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

‘தித்வா’ சூறாவளியை அடுத்து இலங்கைக்கு ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆன்ரே பிரான்ஞ் ஆகியோரினால் கூட்டாக எழுதி வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியை அடுத்துப் பெய்த கனமழை மற்றும் மண்சரிவு என்பன இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை நீரில் மூழ்கடித்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியது. குறிப்பாக இது ஏற்கனவே நலிவுற்ற – விரைவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த மக்களையே வெகுவாகப் பாதித்துள்ளது. ஏற்கனவே பலவீனமான நிதி நிலைமையைக் கொண்டிருந்த இலங்கை, இதன் விளைவாக சுமார் 6 – 7 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டிருக்கிறது.

இலங்கையின் இந்த நிலைவரம் குறிப்பிட்டுக்கூறத்தக்க ஒரு உதாரணம் என்றாலும், அது ஒரு தனித்த நிகழ்வு அல்ல. மாறாக உலகம் முழுவதும், குறிப்பாக இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்ததுடன் அவற்றில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதுமாத்திரமன்றி இவ்வனர்த்தங்கள் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதித்துள்ளன.

உலக பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் இந்த அனர்த்தங்கள், ஏற்கனவே ஈட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தலைகீழாக்குவதுடன் அதன் நீட்சியாகப் பல அடுக்கு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றன. அந்நெருக்கடிகளில் குறிப்பிட்டுக் கூறத்தக்கது கடனன் சுமையாகும். இது அரசாங்கங்களுக்கு மாத்திரமன்றி தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கும் பொருந்தும்.

அரசாங்கத்தினால் பெறப்படும் கடன்கள் பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சந்தை நம்பிக்கையைப் பாதிக்கின்றன. அதேபோன்று வணிகக்கடன்கள் வேலைவாய்ப்பு மற்றும் அரச வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்தோடு வீட்டுக்கடன்கள் வறுமையையும் சமூக ரீதியிலான எதிர்மறைத் தாக்கங்களையும் அதிகரிக்கின்றன.

அதற்கான தீர்வாகவே ‘அபிவிருத்திக்கு நிதியளிப்பதற்கான செவில்லா உடன்படிக்கை’ தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதனூடாக காலநிலை மீள்திறன்கொண்ட கடன் உட்பிரிவுகளை நடைமுறைப்படுத்தமுடியும். அதனூடாக பேரனர்த்தங்கள் ஏற்படும் போது கடன் மீள்செலுத்துகை கடப்பாடு தானாகவே ஒத்திவைக்கப்படும்.

அதேவேளை இறையாண்மை கடன்களிலும் பேரனர்த்தக்காலங்களில் கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாகப் பிற்போடுவதற்கான அம்சங்கள், வணிகங்களுக்கான ஒருங்கிணைந்த அபாய மதிப்பீடு மற்றும் அளவீட்டு அடிப்படையிலான காப்பீடுகள், குடும்பங்கள் மீதான அழுத்தங்களைத் தாங்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகள் என்பன இன்றியமையாதவையாகும்.

miss

கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

April 17, 2026

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pim

280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

April 17, 2026

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு

dddd

மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

April 17, 2026

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக

NAMAL

எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடியின் ராஜினாமா மிகவும் தாமதமானது – நாமல் ராஜபக்ஷ

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ,

ff

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

April 17, 2026

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட

Apo

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

April 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது