இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எங்கே? பருத்தித்துறையில் ஆர்ப்பாட்டம்!

இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று (21) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாமில் வைத்து 15.02.2007 அன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதன் 19 ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கேட்டு யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று (21) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.மதிவாணன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகவியலாளர்கள், வலிந்து காணானல் ஆக்கப்பட்டோரது உறவுகள், பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவரும், சிவகுரு ஆதீன குரு முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் குரலற்றவர்களின் குரல், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, பருத்தித்துறை வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sri

தியாகத்தாய் அன்னை பூபதி போன்றும் நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்

ka

கரந்தெனிய ராஜு” 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

April 18, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “கரந்தெனிய ராஜு” எனப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர், மேலதிக

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்