இரத்தினபுரி – பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயைக் கட்டுப்படுத்த, தீயணைப்புத் துறை, இராணுவம் மற்றும் பிற அவசரகாலக் குழுக்களின் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்போது, தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில், இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.