சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (மே 6) தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். ஏற்கனவே மின்னஞ்சல் வாயிலாக உரிமை கோரியிருந்த நிலையில், இன்று நேரில் சந்தித்து தனது சட்டமன்றக் குழுத் தலைவருக்கான ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளார்.
தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், பாமக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் விஜய் தரப்பு தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்றும், அதனைத் தொடர்ந்து நாளை (மே 7) அவர் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்குவாரா அல்லது உச்சநீதிமன்றத்தின் பழைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி குறைந்த கால அவகாசமே வழங்கப்படுமா என்பது விஜய்யின் அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ‘அக்னிப் பரீட்சையை’ விஜய் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
#Vijay #GovernorMeeting #TVK #ChiefMinisterVijay #BreakingNews #May6 #TamilNaduPolitics #RajBhavan #ThalapathyVijay #NewGovernmentTN #MajorityTest #PoliticalThriller #ElectionResults2026 #VijayAsCM #May7SwearingIn #CongressSupport #PMK #LeftParties #NewEraTN #VijayMakkalIyakkam_“`