இணையதளம் மூலமாக தபால் திணைக்களத்தின் பெயரில் பாரிய நிதி மோசடி

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலியான இணையதளத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு வகையான நிதி மோசடி குறித்து அத்திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பெயரினைத் தவறாகப் பயன்படுத்தி, கைபேசி குறுஞ்செய்திகள் ஊடாக பொதி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என அறிவித்து, அந்தப் பணத்தை இணையவழி முறையூடாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்திச் செலுத்துமாறு வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து ‘Phishing Scam’ எனும் மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மோசடிச் செயன்முறையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி அட்டை விபரங்களை உள்ளிடும்போது, அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் மோசடியாகக் கொள்ளையிடப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் அத்தகைய குறுஞ்செய்திகளைப் பெற்றவர்களிடமிருந்தும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த ‘Phishing Scam’ குறித்து ஏற்கனவே பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இவ்வாறான மோசடியான குறுஞ்செய்தி இணைப்புகள், போலியான இணையதளங்கள் மற்றும் இணையவழி பணக் கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அடையாளம் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தபால் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது வங்கி அட்டை விபரங்கள் அல்லது OTP இலக்கங்களை மூன்றாம் தரப்பு நபர்களுக்கோ அல்லது இணையதளங்களுக்கோ வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் விசேடமாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

G1WY2b6bQAc4JEo

“கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா?” – திமுக முரடர்களைக் கைது செய்ய சீமான் 24 மணி நேரக் கெடு!

April 25, 2026

சென்னை, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அக்கட்சியின்

election-commission-tn

“தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை” – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

April 25, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேவையில்லை என இந்தியத் தேர்தல்

cyber

இலங்கையின் இணையக் கொள்ளை விசாரணைக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒத்துழைப்பு

April 25, 2026

இலங்கை நிதியமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு

imf4

2.5 மில்லியன் அமெரிக்க இணையக் கொள்ளை: சர்வதேச நாணய நிதியம் (IMF) தீவிர கண்காணிப்பு

April 25, 2026

நிதியமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட விவகாரம் சர்வதேச நாணய நிதியத்தின்

676643343_1489508595907722_8015255599450746013_n

உளவளத்துணை மற்றும் உளசமூகப் பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூகமன்ற கலந்துரையாடல்!

April 25, 2026

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண

679436284_1489788825879699_9052492884571897463_n

ஒப்புரவான அபிவிருத்திக்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் – அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ யாழில் தெரிவிப்பு

April 25, 2026

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கௌரவ போராசிரியர் (கலாநிதி) அனில்

default (10)

ஹம்போல்ட் பிரான்கோஸ் (Humboldt Broncos) விபத்து: லொறி சாரதியின் நாடுகடத்தல் இடைநிறுத்தம்

April 25, 2026

2018 ஆம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற ஹம்போல்ட் பிரான்கோஸ் இளையோர் ஹொக்கி அணி வீரர்களின் பேருந்து விபத்துக்குக் காரணமான லொறி

ZHVZIXCHZBFVJLEKSN2R77MNMA

ஹமில்டன் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 16 வயது சிறுவன் பலி, ஆயுதம் ஏந்திய இருவருக்கு வலைவீச்சு

April 25, 2026

கனடாவின் ஹமில்டன் (Hamilton) நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16

4GRWBDGBVV7PIANFHSE2MUZSIQ

ட்ரம்ப் வரிகளை நீக்கும் வரை அமெரிக்க மதுபானங்களுக்குத் தடை: மனிடோபா முதல்வர் அதிரடி

April 25, 2026

கனடாவின் மனிடோபா (Manitoba) மாகாண முதல்வர் வப் கினியூ (Wab Kinew), அமெரிக்க மதுபானங்கள் மீதான தடை குறித்து அதிரடியான

prote

நாளை தமிழ் எழுத்தாளர்களின் புத்தக தடைக்கு எதிரான கண்டனப் போராட்டம்

April 25, 2026

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் தடை உத்தரவுகளுக்கு எதிராக, எதிர்ப்பைப் பதிவு

tr

ரயில் விபத்து: விசாரணைக்காக விசேட குழு

April 25, 2026

சாகரிகா ரயில் தடம் புரண்டதில் கொங்ரீட் சிலிப்பர்களுக்கு (Concrete Sleepers) சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சிலிப்பர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த

th

திறைசேரி மோசடி குறித்து வெளியாகும் செய்திகளை நம்ப முடியவில்லை

April 25, 2026

திறைசேரியின் பணம் இனந்தெரியாத தரப்பினரின் கைக்குச் சென்ற சம்பவமானது ஹேக்கர்களின் (Hackers) செயல் என்று நம்ப முடியாது என சர்வஜன