ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்களுக்குப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது வாழ்த்துகளை ட்விட்டர் (X) வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
“ஆர்ட்டெமிஸ் II குழுவினர் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்த கர்னல் ஹேன்சன் (Colonel Hansen) மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துகள். தாய்நாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறோம்.”என தெரிவித்துள்ளார்
குறிப்பு: ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தில் பயணித்த நான்கு வீரர்களில் ஒருவரான ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen) கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது