சென்னை
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பேச்சுகளுக்கும் ஆளுங்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கும் கடுமையான பதிலடி கொடுத்தார்.
“பைலைத் திறந்து பாருங்கள்!” – முதல்வருக்குச் சவால்:
“முதலமைச்சர் தனது டேபிளில் ஃபைல் இருப்பதாகவும், அதைத் திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்றும் பேசினார். தயவுசெய்து அவர் அதைத் திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காகப் பயப்படுகிறீர்கள்? ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால்தான் ஃபைலைத் திறப்பீர்களா? அல்லது நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிக்கை எடுப்பேன் என்ற உங்களின் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது,” என்று உதயநிதி ஆவேசமாகக் கூறினார்.
சட்டமன்றமா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா?:
“ஆளுங்கட்சியினர் எங்களுக்குப் பதில் சொல்லும்போது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அபாண்டமாகக் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். இதைப் பார்க்கும்போது, நாங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்றே சந்தேகம் எழுகிறது,” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
ரீல்ஸாக வெளியாகும் அவைக்குறிப்புகள்:
“அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகரால் நீக்கப்படும் கருத்துகள் கூட சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) ஆக உடனடியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள்; ஆனால் அதுவும் இணையத்தில் பரவி வருகிறது. இதனால், அவைக்குறிப்பிலிருந்து ஒரு கருத்தை நீக்குவதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
#UdhayanidhiStalin #DMK #ChiefMinisterVijay #TVKGovernment #TNAssembly #SuperSinger #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates