ஆட்சேபனைகளால் ஹட்டன் நகர சபை அமர்வை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று(24.04.2026) நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது.

எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபனைகளால் அமர்வை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

சபை செயல்படத் தொடங்கி பத்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், எந்தவித அபிவிருத்தியும் நடைபெறவில்லை என்றும், நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இங்கு உரையாற்றிய இ.தொ.கா உறுப்பினரும் உபதலைவருமான சுரேன்,

கடந்த சபை அறிக்கையில் பல தவறுகள் உள்ளதாகவும், உறுப்பினர்களின் உரைகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திருமணம் ஆகாத நாடாளுமன்ற உறுப்பினரை “திருமதி” என குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற பிழைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் அவர் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி உறுப்பினர் லோகேஷ்வரன் உரையாற்றுகையில், கடந்த பத்து மாதங்களில் நகரசபைக்கு எந்தவித கொள்வனவுகளும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், சபை மண்டபத்தில் இருக்கும் நாட்காட்டி கூட புதுப்பிக்கப்படாதது நிர்வாக குறைபாட்டிற்கான எடுத்துக்காட்டு என குறிப்பிட்டார். உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்கள் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் தலைவரும் தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினருமான டாக்டர் அழகமுத்து நந்தகுமார், நகரசபையின் அடிப்படை வசதிகளே மோசமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சுகாதார வசதிகள் குறைவாக உள்ளதுடன், பொது சுகாதார பரிசோதகர்கள் இல்லாத நிலைமை நகர சுத்தத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சில சுத்திகரிப்பு பணியாளர்கள் பொதுமக்களிடம் பணம் கோருவதாகவும் குற்றம் சாட்டினார். இ.தொ.கா உறுப்பினர் எஸ். பிரபாகரன் உரையாற்றுகையில்,

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து திட்டமிடல் குழு கூடவில்லை என்றும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நகரசபை அனுமதி இல்லாததால் மக்களுக்கு வங்கிக் கடன் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நகரசபைத் தலைவர், கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனால் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்த நிலையில், அமர்வு குழப்பத்துக்குள்ளானது. இதனால், நகரசபை அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது