ஆசிரியர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஆசிரியர்களால் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, நேற்று(10.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை நிறைவின் பின்னர் பிரதான வாயிலுக்கு வந்த ஆசிரியர்கள் கையெழுத்து வைக்கும் போராட்டத்தினை மேற்கொண்டிருந்ததோடு, தனது கோரிக்கையை நிறைவேற்றுமாறும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கையெழுத்து வாங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.