அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் (05) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டு முதல்வரின் தலைமையுரையுடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இதன்போது சபையின் குழுக்களினால் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகரசபை அமர்வில் இன்றைய அரசாங்கத்தினால் பல வீதிகளை காபட் வீதியாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை வீதியை வீதி அபிவிருத்தி திணைக்களம்,வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரசபை ஊடாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மாநகர முதல்வரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரஜா சக்தி என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் அரசியல் இலாபம் தேடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகரசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இதன்போது குறுக்கிட்டு தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் வறுமையினை ஒழிக்கும் வகையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் ஒருங்கிணைத்தே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு பிரஜா சக்தி திட்டம் அமுல்ப்படுத்தப்படுவதுடன் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காகவே இந்த அமைப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் நலன்சார்ந்த அமைப்பு என்றால் அனைவரும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த திட்டம் மக்களின் வறுமையினை ஒழிக்கும் வகையிலேயே அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த நோக்கமும் இல்லையெனவும் இதற்கு அனைவரது செயற்பாடுகளும் உள்வாங்கப்படும் எனம் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளன.

இன்றை அமர்வில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள அரசைபாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநகரசபையின் உறுப்பினர் ஜெயக்குமாரினால் இது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டிய அவசியம் தொடர்பில் உரையாற்றப்பட்ட நிலையில் இது தொடர்பிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

ஜனநாயகத்தினையும் கருத்து சுதந்திரத்தினைம் பாதிக்கும் வகையிலான சட்டங்களை கொண்டுவருவதை அனுமதிக்கமுடியாது என உறுப்பினர்கள் இதன்போது உரையாற்றிய நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இவ்வாறான விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டுவரமுடியும் என தெரிவித்த நிலையில் இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

kum

தூதரகத்தை மூடும் அமெரிக்கா

March 6, 2026

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக

har

சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு; ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் யோசனை?

March 6, 2026

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள

Dengue

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

March 6, 2026

மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக

boa

நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது!

March 6, 2026

இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும்

Pee

பீல் பிராந்திய காவல்துறையின் மக்கள் சந்திப்பு!

March 6, 2026

எங்கள் தெற்காசிய கூட்டு ஐ.எஸ்.என்(South Asian Collective ISN) நடத்திய இரண்டாவது மக்கள் சந்திப்பு நிகழ்வு நெட்வொர்க்கிங் கற்றல் மற்றும்

WhatsApp Image 2026-03-06 at 12.04.15

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிச் சென்ற படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைப் பிரதேசமான குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின்

photo-collage.png (50)

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டம்!

March 6, 2026

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் எங்கள் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தோம். அதற்காக, விண்ட்சர்

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா

kesa

பாதாள உலகக் குழுத் தலைவர் கொலை வழக்கு:’கெசல்பெத்தர பத்மே’ விசாரணைக்காலம் அதிகரிப்பு

March 6, 2026

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’வைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற

nor

வடக்கின் சமர் ஆரம்பம்

March 6, 2026

உலகெங்கும் வாழும் யாழ். கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர்களாலும், விளையாட்டு ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும்

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது