அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல் எனும் கருப் பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (10) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சட்ட உருவாக்கம் மற்றும் கொள்கை மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடலை சட்டத்தரணி குகதாசன் ஐங்கரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. பெண்கள் நுண்கடன்களால் எதிர்கொள்ளும் சவால்களும் சட்ட ஏற்பாடுகளிலுள்ள பாதுகாப்பின்மை தொடர்பாக தனது அனுபவங்களை மட்டக்களப்பு மாவட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தின் சார்பாக மதனா பாலகிருஷ்ணராஜா பகிர்ந்து கொண்டார்.

பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தீர்ப்பதற்கான சட்ட வழிமுறைகளில் மட்டுப்படுத்தல்கள், அரசினைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், மக்கள் பிரதிநிதிகளின் தொடர் செயற்பாடுகளும் தொடர்பான திறந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

மாதவிடாய்சார் பாராபட்ச நிலைமைகளும் அரச கொள்கைகளின் அமுலாக்கமின்மையும் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் இந்துமதி ஹரிகரதாமோதரன் தெளிவூட்டல் வழங்கியதோடு சமுதாயத்தில் அடையாளப்படுத்தப்பட்ட சமகால சமூகப் பொருளாதார அரசியற் பண்பாட்டுப் பிரச்சனைகள் மற்றும் இடைவெளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமகால பொருளாதார நெருக்கடிகளும் அவர்களின் கோரிக்கைகளும், மக்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் மற்றும் வீட்டுத் திட்டம் தொடர்பான சவால்களும் உடனடி நடவடிக்கைகளும், நிலைமாறுகால நீதிச் செயன்முறைப் பொறிமுறைகளின் செயற்பாடின்மையும் மக்களுக்கான நீதி புறக்கணிக்கப்படலும் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

வாகரைப் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆசிரியர் கணேசமூர்த்தி விக்கிரம்சிங்கன் இதன்போது விளக்கினார். மக்கள் சேவை அணுகலில் மொழியுரிமை மீறப்படலும் மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த சவால்கள், போதைப்பொருள் பாவனை ஏற்படுத்தும் சமூக, பொருளாதார அரசியற், பண்பாட்டு நெருக்கீடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இங்கு கலந்து கொண்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதன்போது பிரசன்னமாகியிருந்த 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு பதில்களை வழங்கியதோடு, தெழிவூட்டல்ஙகளையும், மக்களின் கோரிக்கைகளை தமக்கு எழுத்து மூலம் முன் வைக்குமாறும் அவற்றுக்கு உரிய அதிகாரிகள், அமைச்சர்களினதும் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வுகளைப் பெறுவதற்கு தாம் முன்னிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததோடு, கொள்கைகளில் மாற்றம், சட்ட உருவாக்கம், தொடர்பிலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க