அரசின் செயற்பாடுகள் ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கின்றன – சித்தார்த்தன்

மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன் மூலம் தான் இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்றுவெள்ளிக்கிழமை (25) சாவகச்சேரியில் கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

மிகக் கொடூரமான ஆட்சியான கடந்த கால ஆட்சியில் கூட இப்படியான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை. எத்தகைய விசாரணைகள் நடைபெற்றாலும் இறுதியாக நீதிமன்றத்தின் ஊடாகவும் அல்லது தேர்தல் திணைக்களத்தின் ஊடாகவும்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதனை விடுத்து அரச நிகழ்ச்சி நிரலில் ஆளுநர் இதனை செய்துள்ளார்.

எதற்காக இவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற கேள்வி வருகின்றபோது அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சாவகச்சேரி நகரசபை தவிசாளர் கிசோர் நீக்கப்பட்டதற்கு காரணமாக சாவகச்சேரியில் மக்களுக்கு எதிராக, வர்த்தகர்களுக்கு எதிராக ஏதாவது நடைபெற்றால் உடனடியாகவே குரல் கொடுப்பவர். இதுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. வவுனியா மாநகர சபை தவிசாளருக்கு எதிராக ஆரம்பத்தில் எதுவும் இல்லை. மூன்று மாத காலமாகத்தான் ஊழல் என்று காரணம் கூறப்படுகிறது. முறையான காரணங்கள் தெரிவிக்காது ஊழல் செய்துவிட்டதாக ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலைமைகள் தொடர்ந்தும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருப்பதாக நாங்கள் உணர்கின்றோம். மக்கள் மட்டுமல்ல தமிழ்கட்சிகள் மட்டுமல்ல ஐனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் அனைவருக்குமே ஒன்றிணைந்து இதனை எதிர்ப்பதன் மூலம் தான் இப்படியான செயற்பாடுகளை தடுக்க முடியும். அதுமட்டுமன்றி ஐனநாயகத்தை மீண்டும் உருவாக்க முடியும். மிக்க கொடூரமான ஆட்சி என கடந்த காலங்களில் கருதப்பட்ட ஆட்சியில் கூட எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான செயல்திட்டங்கள் செயற்படுத்தவில்லை வேறுவிதமான செயற்பாடுகள் நடந்திருக்கலாம்.

ஆனால் ஐனநாயகத்திற்கு எதிராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை விலத்துகின்ற ஐனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. இத்தகைய ஐனநாயக விரோத செயல்பாடுகள் இடம்பெறாது இருக்க தமிழ்கட்சிகள், மக்கள் இணைந்து தொடர்ச்சியாக இணைந்து போராடுவதன் மூலம் தான் இவைகளை தடுத்து நிறுத்தலாம் என்றார்.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில், நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர், உப தவிசாளரின் பதவியை நீக்கியும், நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும், சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்றைய தினம் முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சாவகச்சேரி சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

அதேவேளை , கொடிகாமம் பகுதிகளிலும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன்,சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Bak

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் காலமானார்!

June 27, 2026

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73.

730530280_1631146617985168_3040783259244938520_n

நான்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள்: அல்பெர்ட்டா நபர் மீது வழக்கு!

June 27, 2026

நான்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை (12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்) இலக்கு வைத்து நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பாக,

730992711_1542493037581043_680212040586658843_n

டொராண்டோவில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேகநபரைத் தேடும் காவல்துறை

June 27, 2026

கென்னடி (Kennedy) மற்றும் எக்லிண்டன் (Eglinton) பகுதிக்கருகே நடந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, 34 வயதுடைய நபர் ஒருவரைத்

image_a0e6a0260b

தியத்தலாவை அருகே இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 40 பேர் காயம்

June 27, 2026

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) க்குச் சொந்தமான பேருந்து ஒன்று, தியத்தலாவை

oman coast

சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா வான் தாக்குதல்

June 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சரக்குக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முட்டாள்தனமாக மீறியுள்ளதாக”

731037809_1714698729946341_4309992625186380278_n

எல்லை கடந்த குற்றங்களை ஒடுக்க கத்தாருடன் பொதுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது கனடா

June 27, 2026

பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், எல்லை கடந்த (Cross-border) குற்றங்கள் மற்றும் உருவெடுத்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாளுவதையும் நோக்கமாகக் கொண்ட

730816607_1025777239972508_5491364805794340191_n

நம்பிக்கை துரோகம் செய்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) காவல் அதிகாரி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு

June 27, 2026

கடந்த 2025 மே மாதத்தில் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு சம்பவங்கள் குறித்த சுயாதீன விசாரணைக்கு (Independent investigation) பிறகு, நியூ

726892031_4524338737809751_4039774695490202840_n

முதியவர்களை இலக்கு வைத்து $1.4 மில்லியன் பொன்சி-பாணி மோசடி: பிராம்ப்டன் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது

June 27, 2026

சுமார் 1.46 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்திய முதலீட்டு மோசடி தொடர்பாக, கனடா பிராம்ப்டன் (Brampton) நகரைச் சேர்ந்த 62

Euri

கடுமையான வெப்பத்தில் ஐரோப்பா!

June 27, 2026

ஐரோப்பிய நாடுகளைக் கடுமையான வெப்ப அலை வாட்டி வதைத்து வரும் நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொது இடங்களில் மதுபானம்

congo

அதிகரித்துக் கொண்டு செல்கிறது கொங்கோ எபோலா வைரஸ் தொற்று

June 27, 2026

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,155 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக

is

இஸ்ரேல் – லெபனான் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்து

June 27, 2026

இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வொஷிங்டனில் பல நாட்கள் நடத்தப்பட்ட

si

அரசின் செயற்பாடுகள் ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கின்றன – சித்தார்த்தன்

June 27, 2026

மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன்