கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,155 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை வரையிலான உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்த நிலைவர அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தீவிரப்படுத்தப்பட்டுள்ள நோய்த்தொற்றியல் மற்றும் உயிரியல் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, நோய்த்தொற்றுகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடிந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வாராந்த அடிப்படையில் சமூகங்களுக்கு இடையிலான எபோலா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை இத்தரவுகள் உறுதிப்படுத்துவதாக அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.