அரசாங்கம் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது – சாணக்கியன்

அரசாங்கம் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காக கொண்டு செயற்படுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று (30) மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டிலே மத்திய வங்கியுடன் சம்பந்தப்பட்ட, திறைசேரியுடன் சம்பந்தப்பட்ட நிதி மோசடியா அல்லது நிதி களவு இல்லையா அல்லது என்ன காரணம் என்று தெரியாது, ஆனால் மக்களுடைய நிதி, மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விடயம் சம்பந்தமாக நிதிக்குழுவில் இருக்கிற ஒரே ஒரு தமிழ் உறுப்பினர் என்ற அடிப்படையிலே, இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்களுக்கு இது சம்பந்தமான ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய ஒரு அவசியக் கட்டாயத் தேவை இருக்கிறது.

அந்தப் பொறுப்பும் என் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் பாராளுமன்றத்திலே இந்த நாட்டில் நிதி அனைத்திற்கும் பொறுப்பு பாராளுமன்றம். அதாவது வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்துவது பாராளுமன்றம், அதேபோல நாட்டிலே கடன் வாங்குவதற்குச் சம்பந்தமாக அனுமதி பெறுவதும் பாராளுமன்றத்தின் ஊடாகத்தான். புதிய வரி விதிப்பு என்றாலும் பாராளுமன்றம்தான் அந்தச் சட்டத் திருத்தங்களை கொண்டு வரும்.

ஆனால் பாராளுமன்றத்திலே இருக்கிற அனைவராலும், அதாவது 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயம் சம்பந்தமாக ஆராய முடியாத காரணத்தினால், நிலையியற் கட்டளையின் கீழ் நிதிக்குழு என்று ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிதிக்குழு தான் பாராளுமன்றத்திற்கு வரவு செலவுத் திட்டமாக இருக்கட்டும், சகல விடயங்களையும் உட்பட பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன் நிதிக்குழுவின் அனுமதியைப் பெற்றுத்தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிதிக்குழுவைப் பற்றி பலருக்குத் தெரியாது. இந்த நிதிக்குழுவில் நான் ஒரு உறுப்பினராக இருக்கின்றேன். தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களில் நான் ஒருவன் மட்டும்தான் இதில் இருக்கிறேன். அந்த வகையிலே இது சம்பந்தமாக வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒருவன் என்ற அடிப்படையிலும், தமிழரசு கட்சியினுடைய பாராளுமன்றக் குழுத் தலைவர் என்ற வகையிலும் இது சம்பந்தமான ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

உண்மையில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் முன்வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்கும் பொழுது மக்கள் மத்தியிலே இருந்த ஒரு நம்பிக்கை, இவர்கள் ஊழல் செய்யாதவர்கள், மோசடி செய்யாதவர்கள், நேர்மையானவர்கள் என்றெல்லாம் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தது. ஆனால் அதே நேரத்தில் நாங்கள் தொடர்ச்சியாகச் சொன்ன ஒரு விடயம், இவர்களுக்கு அனுபவம் குறைவு, போதாது என்பதாகும்.

இருந்த பொழுதும் அண்மைக்காலமாக நடந்த ஒரு சில சம்பவங்களைப் பார்த்தால், நிலக்கரியுடன் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு. இந்த நிலக்கரியின் ஊடாக 35 பில்லியன் ரூபாய் வரைக்கும் இதுவரைக்கும் நட்டம் ஏற்பட்டிருப்பதாக ஒரு சில நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அதனைத் தொடர்ந்து பார்த்தால், லால் காந்த அமைச்சர் (விவசாய அமைச்சர்) உடைய ஒரு வீடு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. ஏனெனில் அவருடைய அந்த வீடு சொத்துப் படிவத்திலே இல்லை. அதே நேரத்தில் அந்த வீடு கட்டுவதற்கு அவருக்கு எங்கிருந்து நிதி வந்தது என்பது சம்பந்தமாக ஒரு சர்ச்சை வந்திருக்கிறது. அதேபோலத்தான் ஊடகங்களில் அவருடைய சொத்து சம்பந்தமாக எத்தனையோ பல கோடிகள் சொத்து இருக்கிறது என்றெல்லாம் வந்தது.

அதேபோலத்தான் சமந்த வித்யாரத்ன அமைச்சர், 21 லட்சம் ரூபாய் தனக்கு வருமானம் வருவதாக மிளகுத் தோட்டம் வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இவை அனைத்தையும் தாண்டி இன்று ஒரு மிகவும் முக்கியமான பிரச்சினை வந்திருக்கிறது. திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர், அதாவது சுமார் ஒரு 700 மில்லியன் ரூபாய் பணம் எங்கு போனது என்று தெரியாத ஒரு பிரச்சினை வந்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து நலிந்த ஜயதிஸ்ஸ அமைச்சர் சொல்லியிருக்கிறார், இன்னும் ஒரு 6,00,000 அமெரிக்க டொலர், அதாவது கிட்டத்தட்ட ஒரு 150 மில்லியன் – 200 மில்லியன் ரூபாய் பணம் காணவில்லை என்று சொல்கிறார். அப்பொழுது இதெல்லாம் நிதிக்குழு தான் இது சம்பந்தமான விசாரணை செய்ய வேண்டும். அந்த வகையிலே நாங்கள் நிதிக்குழுவுக்கு முன்பாக திறைசேரி செயலாளரை வரச் சொல்லிச் சொல்லி இருந்தாலும் கூட, திறைசேரி செயலாளர் அவர்கள் தான் வரமாட்டேன் என்று சொல்லி ஒரு செய்தி அனுப்பி இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நிதிக்குழு கூட்டம் நடைபெறும், அதிலே திறைசேரி செயலாளர் வரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நிதிக்குழுவைச் சேர்ந்த நாங்கள் இருக்கின்றோம்.

அந்த வகையிலே இந்த அரசாங்கத்தினுடைய காலப்பகுதியிலே, அதாவது சைபர் அட்டாக் ஒன்று Hack செய்து 2.5 மில்லியன் டொலர் போனது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். ஏனெனில் இதிலே 13 முதல் 16 பேருடைய அனுமதியுடன் தான் இந்த நிதி வெளியே போயிருக்கிறது என்பதுதான் இன்று பரவலாகப் பேசப்படும் விடயம். அந்த அடிப்படையில் இந்த விடயம் சம்பந்தமாகப் பல சந்தேகங்கள் வந்திருக்கின்றன. அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பிறகு அமைச்சர் ராஜினாமா செய்திருக்கிறார்.

இன்று இந்த விடயங்களை நாங்கள் ஏன் சொல்கிறோம் என்று சொன்னால், அரசாங்கம் மிகக் கவனமாக இந்த காலப்பகுதியைக் கையாள வேண்டும். ஏனெனில் மக்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை – அதாவது தமிழ் பேசும் மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் எங்களுடைய ஊடகங்களைப் பார்த்தால் தெரியும். ஆனால் சிங்கள மக்கள் மத்தியிலே இன்று அரசாங்கம் முழுமையாகச் செல்வாக்கை இழந்துள்ளது.

இப்படி அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு மிகவும் மோசமான நிலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றது. இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாங்கள் தொடர்ச்சியாகச் சொன்னது, இதிலே களவு இல்லாவிட்டால் கூட – சில நேரம் நமக்குத் தெரியாது – அரசாங்கம் சொல்கிற விடயம் நிலக்கரி விஷயத்திலே இது களவெடுக்கப்படவில்லை, ஆனால் தரம் குறைந்த நிலக்கரி வந்திருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

அப்பொழுது தரம் குறைந்த நிலக்கரி வந்திருக்கிறது என்றால் செயல்திறன் இல்லாதவர்கள், வேலை செய்யத் தெரியாதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் என்பது இப்பொழுது அம்பலமாகிக் கொண்டிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்து 18 பில்லியன் டொலர் களவெடுத்ததாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. அப்பொழுது இந்த அரசாங்கம் இன்று அந்த எண்ணிக்கையை வேகமாக எட்டிக் கொண்டிருக்கிறது. செயல்திறன் இல்லாதபடியாலா அல்லது ஊழலாலா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேபோலத்தான் இந்த அரசாங்கமும் இந்த நாட்டைத் தொடர்ந்து மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைவரும் 75 ஆண்டுகளாக பௌத்த மதத்தை வைத்துக்கொண்டு, பௌத்த மதத்தை வளர்ப்பதன் ஊடாகத் தங்களுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். தங்களுடைய செல்வாக்கை அதிகரிக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் வந்த பிறகு பௌத்த மதத்தை வைத்துக்கொண்டு தலதா மாளிகையிலே வந்து முதல் ஆரம்பித்தார்கள், புத்தருடைய அந்தப் புனிதச் சின்னங்களைக் காட்சிப்படுத்துவதாக. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து புனிதச் சின்னங்களைக் காட்சிப்படுத்துவது கொழும்பு கங்காராமையிலே செய்தார்கள். அதனைத் தொடர்ந்து இப்பொழுது 10 நாட்களாகச் சமாதான பாதயாத்திரை என்று சொன்னார்கள். அப்பொழுது இவர்கள் உண்மையில் மக்கள் முகம் கொடுக்கிற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான விஷயமாக வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதை விட்டுவிட்டு மக்கள் மத்தியிலே மீண்டும் நம்பிக்கையைப் பெறக்கூடிய வகையிலே அவர்களுடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.

நிதிக்குழுவிலே இன்று மாலையிலே அந்தத் திறைசேரி செயலாளர் வருவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்த்து மிச்ச விடயங்களை நாங்கள் கருத்துச் சொல்லலாம் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து